Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மீண்டும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி – என்ன படம் தெரியுமா…? – உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி காம்போவாக அமைந்து உள்ளது. இதனை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணையுமா என்று நிறைய சமூக வலைதளங்களில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கு தற்சமயம் விடை கிடைத்துள்ளது.

தனுஷ்

தனுஷ்

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் எனும் இயக்குனர் நிறைய திரைப்படங்களை எடுத்து அனைத்திலும் வெற்றி கண்ட ஒரு இயக்குனர் ஆவார் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷம் என்று சொல்லும் அளவிற்கு இவரது டைரக்ஷன் அனைவராலும் வெகுவாக கவரப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் தனுஷை வைத்து முதன் முதலாக பொல்லாதவன் எனும் திரைப்படத்தை எடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் வெற்றிமாறன். இதனை தொடர்ந்து இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனை அடுத்து மீண்டும் தனுசை வைத்து ஆடுகளம் எனும் திரைப்படத்தை எடுத்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படம் மதுரையில் சேவல் சண்டையை மையமாக கொண்ட ஒரு கதைக்களம் ஆகும். இதனை அற்புதமாக எடுத்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது.

--Advertisement--

தனுஷ்

தனுஷ்

இதனை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் விசாரணை எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த படம் தமிழ்நாட்டு காவல்துறையின் பின்னணி முகத்தை கிழித்தெறியும் விதமாக அப்பட்டமாக ஒரு உண்மையான சம்பவத்தை பற்றி எடுக்கப்பட்ட ஒரு படமாகும்.

இந்த படம் வந்தபோது சர்ச்சையை கிளப்பி அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்த திரைப்படம் மேலும் இந்த படத்தில் தமிழ் நாடு காவல்துறையின் கோர முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

இதனை அடுத்து மீண்டும் தனுஷ் அவர்களின் கூட்டணியில் அசுரன் எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த படம் ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று கதைக்களத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைவராலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனை அடுத்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

தனுஷ்

தனுஷ்

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் வட சென்னை 2 திரைப்படம் எடுக்கப் போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து இந்த படத்தின் கதை அம்சம் பற்றி வெற்றிமாறன் நிறைய தயார் செய்து வருகிறார். இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சற்று மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் தனுஷ் அவர்களின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஆதலால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் விடுதலை எனும் திரைப்படத்தை எடுத்து முடித்த வெற்றிமாறன் தற்சமயம் விடுதலை 2 திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top