பீரியட்ஸ் நேரத்துல மட்டும் அந்த பழக்கத்தை பண்ண மாட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிகில் பட நடிகை..!

நடிகர் விஜய்க்கு தொடர்ந்து மூன்று வெற்றி படங்கள் என்றால், அது டைரக்டர் அட்லீ இயக்கிய தெறி, மெர்சல், மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்து, மிகப்பெரிய வசூலையும் அள்ளிக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

அட்லி

இந்த படங்களை இயக்கியவர் டைரக்டர் அட்லி. இவர் ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர்.

இந்தியில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டிலும் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்படுகிறார். அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அந்த படத்தை டைரக்ட் செய்ய போவது அட்லிதான்.

பிகில்

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய படமாக பிகில் இருந்தது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

--Advertisement--

காயத்ரி ரெட்டி

இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தவர்தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் இருந்த அவர், பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். பிறகு அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்டு, 10 இடங்களில் ஒரு இடத்தை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலமாக தான் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு காயத்ரி ரெட்டிக்கு கிடைத்தது.

பிகில் படத்தில் நடித்த பிறகு, தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு இல்லாத நிலையில், அவர் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். மாடலிங் துறையில் அவர் இருப்பதால், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அடிக்கடி உடற்பயிற்சி செய்கிறார்.

கவர்ச்சியான ஆடையில்…

மேலும், தனது உடல் அழகை வெளிப்படுத்தும் விதமாக, கவர்ச்சியான தோற்றத்தை தரும் மாடர்ன் ஆடைகளை அணிந்து கொண்டு, அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூடு கிளப்பி வருகிறார்.

சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 43 நாட்களுக்கு பின் வெளியேறிய காயத்ரி ரெட்டிக்கு பிகில், தீபாவளி, ரன் பேபி ரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நிஷாந்த் என்ற சிவில் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு, ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி விட்டார்.

உடல் ஆரோக்கியம்

சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய காயத்ரி, இப்போது ஆரோக்கியமாக வாழ்வது குறித்தும், உடல் ஆரோக்கியம் குறித்தும் இணையதளத்தில் தொடர்ந்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

பீரியட்ஸ் நேரத்தில்…

சமீபத்தில் காயத்ரி ரெட்டி, நான் ஒரு செல்பிஷ் என்கிற வீடியோவில், பீரியட்ஸ் நேரத்தில் நான் காபி குடிக்க மாட்டேன், அப்படி குடிப்பதால் அது எனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும். அப்போது எனக்கு ஏற்படும் வலி காரணமாக பிளாக் அவுட் ஆகி விடுவேன்.

நான்கு நாட்கள் கழித்து குடிக்கிறேன்

மேலும், பீரியட்ஸ் முடிந்த நான்கு நாட்கள் கழித்து, தற்போது காபி குடிக்கிறேன், என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஏதாவது நான் குடிக்க விரும்பினால் லெமன் டீ அல்லது ஜிஞ்சர் டீ குடிப்பேன் யாரும் பீரியட்ஸ் நேரத்தில் காபி குடிக்க வேண்டாம் என்றும் காயத்ரி ரெட்டி பெண்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

பீரியட்ஸ் நேரத்துல மட்டும் காபி குடிக்கிற பழக்கம் வேண்டாம் என்று பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி பெண்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.