Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

இதை செய்தால் உடலுறவு சிறப்பாக இருக்கும்.. கூச்சமில்லாமல் ஓப்பனாக கூறிய ஜெனிலியா..!

கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஜெனிலியா.

முதல் படமே பிரம்மாண்ட இயக்குனரின் இயக்கத்தில் வெளியானது. ஆனால், மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. தமிழ் சினிமாவிற்கு பாய்ஸ் திரைப்படம் ஒரு கரும்புள்ளி என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

தமிழ் சினிமாவின் படங்கள் பட்டியலில் இருந்து பாய்ஸ் திரைப்படத்தை முற்றும் முழுதாக நீக்க வேண்டும் இது தமிழ் படமே கிடையாது என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர் சினிமா விமர்சகர்கள்.

ஆனால் இளவட்டங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது பாய்ஸ் திரைப்படம். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்கள் எல்லாம் நடித்திருக்கிறார் ஜெனிலியா.

--Advertisement--

என்றாலும் கூட சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் குறும்புக்கார துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது கூட இளம் பெண்கள் யாராவது குறும்புத்தனமாகவும் துடுக்குத்தனத்துடனும் இருந்தால் பெரிய சந்தோஷ சுப்பிரமணியம் ஜெனிலியான நினைப்பு என்று கலாய்க்கும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது 36 வயதாகும் நடிகை ஜெனிலியா கடந்த 2012 ஆம் ஆண்டு ரித்திஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் உடலுறவு குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

உடலுறவு என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு உணர்வு. உடலுறவின் காரணமாகத்தான் நான் பிறந்திருக்கிறோம்.

ஆனால், இதனை ஒரு அருவருக்கத்தக்க சொல்லாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இது சாதாரணமாக பேசப்படக்கூடிய விஷயமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுறவு சார்ந்த நிறைய சந்தேகங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள முடியும்.

எனவே உடலுறவு ஒரு தீண்டத்தகாத வார்த்தையாகவோ ஒரு அன்னியமான சொல்லாகவோ பார்க்க தேவையில்லை. நாம் வழக்கமாக பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளில் ஒன்றாக இதனை பாவித்து இது சார்ந்த விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் அதுதான் சிறப்பான உடலுறவுக்கு வழிவகை செய்யும் என கூறியிருக்கிறார் நடிகை ஜெனிலியா.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

Trending Now

To Top