Crowd Funding-ல் கோடிக்கணக்கில் மோசடி..! – முன்னணி நடிகரை வம்பிழுத்து சிக்கிய பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube மற்றும் சமூக வலைதளங்களில் பரிதாபங்கள் என்ற சேனல் மூலமாக தங்களுடைய கேலிக்கையான வீடியோக்களை வெளியிட்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள் கோபி மற்றும் சுதாகர்.

கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த Youtube தளத்தில் இருவரும் இயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் மெட்ராஸ் சென்ட்ரல் என்ற நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வந்தவர்கள் தங்கள் வளர்ந்த பிறகு தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் பயணித்து வருகின்றனர்.

தங்களுக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் இவர்கள் திரைப்படங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வகையில், தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்காததால் Crowd Funding முறையில் திரைப்படங்களை தயாரிப்பது என்ற முயற்சியில் ஈடுபட்டு ரசிகர்களிடமிருந்து ஆறு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை பெற்றனர்.

ஆனால், கொரோனா நெருக்கடி இவர்களுடைய திட்டத்திற்கு மிகப்பெரிய சிக்கலை கொண்டு வந்து சேர்த்தது. படத்திற்காக பெரும் தொகையை செலவு செய்த கோபி மற்றும் சுதாகருக்கு கொரோனா நெருக்கடி மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. படம் எடுக்கிறேன் என்று சொல்லி ரசிகர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள் கோபி சுதாகர் என்று இணைய பக்கங்களில் பலரும் பேசத் தொடங்கினார்கள்.

--Advertisement--

இதனை அவதானித்த கோபி மற்றும் சுதாகர் இருவரும் தங்களுடைய தரப்பு விளக்கத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தனர். அதன் பிறகு இந்த விவகாரம் அடங்கி போனது. இந்நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்கும் விதமாக பை-பாஸ் என்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்து பரிதாபங்கள் குழு.

இதனால் நடிகர் கமலஹாசனின் ரசிகர்கள் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். கோபி மற்றும் சுதாகர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் அரசியல் தலைவர்களை பங்கம் செய்யும் விதமாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை கலாய்க்கும் விதமாகவும் வீடியோக்களை வெளியிட்டு வந்த பரிதாபங்கள் குழு தற்பொழுது அரசியல் பக்கம் செல்லாமல் பொதுவான கேள்விக்கான விஷயங்களை செய்து வருகிறது.

தற்பொழுது நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்கும் விதமாக அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ கமல்ஹாசன் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

இணைய பக்கங்களில் பலரும் கோபி சுதாகருக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில்ஒரு கமல் ரசிகர் இவர்கள் இருவரும் Crowd Funding என்ற முறையில் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கிறார்கள்.

இவர்கள் மீது Legal Wing-ஐ வைத்து வழக்கு தொடுத்தால் கமலஹாசனின் காலில் விழுந்து விடுவார்கள். ஆனால் கட்சி..? என்று கேள்வி எழுப்பும் விதமாக ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.

சாதாரணமான ஒரு வீடியோவில் ஆரம்பித்த இந்த பஞ்சாயத்து.. இப்போது சட்ட சிக்கலை அவர்கள் மீது இழுத்து விடும் வரை வந்திருக்கிறது. இப்படியான பதிவுகளுக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இத்தனை நாட்களாக இவர்கள் Crowd Funding முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று உங்களுக்கு தெரியாதா..? அப்போதெல்லாம் வழக்கு தொடுக்காமல் கமலஹாசனை கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டு விட்டார்கள் என்றதும் தற்பொழுது திடீரென ஞாபகத்துக்கு வந்து வழக்கு தொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறீர்களா..? என்று பரிதாபங்கள் கோபி சுதாகருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களையும் பார்க்க முடிகிறது.