Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கொத்து கொத்தாக தொட்டாலே முடி உதிருதா? – முடி உதிர்தல் நீங்க ஹேர் பேக் யூஸ் பண்ணுங்க..!!

 முடி உதிர்தல் என்பது இன்று பல்வேறு காரணங்களாக நிகழ்கிறது. உடலில் ஆரோக்கியம் இன்மையாலும், ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாமல் இருப்பதும் முடி உதிர்வது ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இந்த முடி உதிர்தல் இன்று கடுமையான பிரச்சினையாக உருவாகி உள்ளது.

உங்கள் முடி தொட்டதுமே அப்படியே உதிர்கிறது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஹேர் மாஸ்கை பயன்படுத்துவதின் மூலம் எளிதில் முடி உதிர்வதை கட்டுக்குள் கொண்டு வருவதோடு முடி உதிர்வதிலிருந்து விடுதலையும் அடைக்கலாம்.

மேலும் இந்த ஹேர் மாஸ்கை நீங்கள் உங்கள் வீட்டிலேயே தயாரித்து  நீங்கள்மட்டும் அல்ல அனைவரும் பயன்படுத்தலாம்.

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்

1.வெள்ளை உளுந்து நாலு டேபிள் ஸ்பூன்

2.ஆளி விதை இரண்டு டேபிள் ஸ்பூன்

--Advertisement--

3.கற்றாழை ஜெல் 4.ஆமணக்கு எண்ணெய்

செய்முறை

மேற்கூறிய இந்த நான்கு பொருட்களையும் நீங்கள் எடுத்து நன்கு அரைத்து ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் .அப்படி செய்து முடித்தவுடன் இதனை உங்கள் முடியின் வேர்க்கால்களில் படுமாறு நன்கு மசாஜ் செய்து தேய்த்து விடவும்.

 இந்த கலவையை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். இதனை அடுத்து நீங்கள் உங்கள் தலையை ஷாம்பு கொண்டு குளிக்காமல் செம்பருத்தி பூவின் இலைகளை அரைத்து அதனோடு வெந்தயமும் சேர்த்து உங்கள் முடிகளில் அப்ளை செய்து குளித்து வந்தால் போதுமானது.

இதனை மாதத்தில் மூன்று முறை இது போல செய்வதின் மூலம் உங்களுக்கு முடி உதிர்வதில்  பிரச்சனை ஏற்படாது.

இந்த ஹேர் மாஸ்கை நீங்கள் எல்லா தர முடிகளுக்கும் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹேர் மாஸ்கை பயன்படுத்தி உங்கள் முடிவு உதிர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து கொள்ள முடியும்.

எனவே இதனை கட்டாயம் இதை நீங்கள் செய்து பார்த்து உங்களது ரிசல்ட்டை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top