Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

படித்து டாக்டர் பட்டம் வாங்கிய ‘ஹிப்ஆப் தமிழா’ ஆதி

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களில் ஹீரோ ஹிப்ஆப் தமிழா ஆதி. சமீபத்தில், இசைத்துறையில் பி.எச்டி படித்து முடித்து உண்மைாகவே டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஆப் தமிழா ஆதி.

படித்து டாக்டர் பட்டம் வாங்கினார் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் சில நடிகர்களுக்கு போலி டாக்டர் வழங்கப்பட்டதுதான்.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ஆதி, மீசைய முறுக்கு படத்தின் மூலம், நாயகனாக மாறினார். அந்த படமும், நல்ல வரவேற்புடன் வெற்றி பெற்றது.

தொடர்ந்து சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, நான் சிரித்தால், நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்களில், நல்ல கருத்துகள் இருந்தன. ஆனால், திடீரென சில மாதங்களாக ஆதி, காணாமல் போய் விட்டார்.

அவரது படங்களும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது இரண்டு படங்களில் இவர் நடித்துக்கொண்டிருப்பதாக, தகவல்கள் வெளிவந்துள்ளது.இவர் எங்கும் காணாமல் போகவில்லை. வெளிநாட்டுக்கு சென்று, இசைத்துறையில் பி.எச்டி எனப்படும் படிப்பை படித்து, டாக்டர் பட்டத்துடன் வந்திருக்கிறார்.

--Advertisement--

இவர், இனி இசைத்துறையில், பல ஆராய்ச்சிகளை செய்ய முடியும். மேலும், தமிழ் சினிமாவில் இசைத்துறையில் பி.எச்டி படித்து முதன் முறையாக பட்டம் பெற்றவர் என்ற பெருமையும், ஹிப்ஆப் தமிழா ஆதிக்கு மட்டுமே சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in

Trending Now

To Top