“யார் இந்த அதர்வண பத்திரகாளி..! – தெரிந்து கொள்ளலாமா?

தான் பெற்ற பிள்ளைகளை காக்கின்ற சக்தியாக இந்த அதர்வண பத்திரகாளி திகழ்கிறார்.மேலும் அதர்வண பத்திரகாளியின் மறு பெயர் தான் பிரத்தியங்கரா தேவி. எல்லோரையும் காக்கின்ற அன்பு உள்ளம் கொண்ட தேவியாக திகழும் இவர் நரசிம்ம மூர்த்தியின் கோபத்தை தணித்து சார்ந்தத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

 இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரத்யங்கரா தேவி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேவி சர்வேஸ்வரரின் நெற்றியில் இருந்து தோன்றியவள் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

Atharvana Bathrakali

பார்க்கும்போது பயத்தை தருகின்ற ரூபத்தில் இருந்தாலும் குழந்தை உள்ளத்தோடு பக்தர்களுக்கு வேண்டியதை அள்ளித் தரக்கூடிய அற்புத தெய்வமாக இருந்த தெய்வம் திகழ்கிறாள்.

இந்த தேவியின் பெருமையை விளக்கும் ருக் மந்திரங்கள் ஒன்பது வர்க்கங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு 48 ருக் மந்திரங்கள் அம்மனின் புகழை பாடுவதால் இவளை அதர்வன பத்திரகாளி என்று அனைவரும் அழைக்கிறார்கள். எதிரிகளை வீழ்த்தவே இந்த மந்திரங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது.

Atharvana Bathrakali

மேலும் நம் மீது ஏவி விடப்படும் தீய சக்திகளை அழிக்கக்கூடிய மிக நல்ல மந்திரமாக இந்த ருக் மந்திரம் திகழ்கிறது. பிரத்யங்கரா தேவி சிம்ம ரூபம் கொண்டவள். கால பைரவரின் துணைவி என்று கூட சிலர் கூறுகிறார்கள். அம்மனின் கையில் பெரிய சூலம், கபாலம், பாசம், தமரூகம் போன்றவற்றை தன் இடத்தில் கொண்டிருப்பவள்.

--Advertisement--

மேலும் மூன்று கண்கள், பிறை சந்திரன் ஒளி வீசும் தலை, 8 சர்ப்பங்களை அணிந்த கோலம், ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் வகையான ஆயுதங்கள் என பார்ப்பதற்கு பல கோடி கண்கள் வேண்டும். இவளின் மூல மந்திரம் 20  அச்சரங்களைக் கொண்டது.

இரண்யனை கொல்வதற்காக கட்டி எடுத்த அவதாரமாக கூறப்படுகிறது. மேலும் இந்த அவதாரத்தில் கடவுளை இழிவு படுத்திய இரணியன் கொன்று தேவர்களை ரசித்த தெய்வமாக விளங்குகிறாள்.

Atharvana Bathrakali

எனவே நமது வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை தகர்த்து எறியவும் நம் குடும்பத்தில் ஏற்படுகின்ற துயர்களை துடைத்திடவும் இந்த தேவியை வழிபட நினைத்ததை தருவதோடு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளை வேரறுக்க கூடிய அற்புத ஆற்றல் கொண்ட தெய்வம்.

எனவே மாசத்திற்கு ஒருமுறை நீங்கள் இந்த தேவி இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் உங்களுக்கு வரும் எதிரி தொல்லைகளை நீங்கள் எளிதில் சமாளிப்பதோடு எதிரிகளை இல்லை என்று கூறும் அளவுக்கு மாற்றிவிட முடியும்.