Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உங்க வீட்டுப் பிள்ளைகளின் வாட்டர் பாட்டில் -லா..!” – இனி எப்படி சுத்தம் பண்ணுங்க..!!

நாம் பயன்படுத்துகின்ற வாட்டர் பாட்டில்களை நீங்கள் எப்படி சுத்தப்படுத்துகிறீர்கள் நீங்கள் சுத்தம் படுத்துவது போதுமான சுகாதாரத்தை உங்களுக்கு கொடுக்கிறதா?.

 ஏனென்றால் பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற வாட்டர் பாட்டில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த வாட்டர் பாட்டில்களை கீழ்காணும் முறைப்படி நீங்கள் சுத்தம் செய்வதால் மட்டுமே அந்த பாக்டீரியாக்களை எளிதில் விரட்டி அடிக்க முடியும்.

வாட்டர் பாட்டில்களை சுத்தம் செய்வதற்கான சிறப்பு முறைகள்

👍உங்கள் குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்வதற்கு முன்பு அன்றைய இரவே உங்கள் பாட்டிலில் சிறிதளவு வெந்நீரை ஊற்றி அதில் பேக்கிங் சோடாவை கலந்து இரவு முழுவதும் ஊர விட்டு விடுங்கள். பிறகு மறுநாள் காலை எழுந்ததும் அதை கொட்டி நன்கு கழுவி விடுங்கள்.

👍 அப்படி நீங்கள் கழுவும் போது முதலில் குளிர்ந்த நீரில் கழுவி விட்டு பிறகு வெந்நீரைக் கொண்டு உங்கள் பாட்டிலை நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் அதில் இருக்கக்கூடிய அத்தனை தூசிகளும் வெளியேறி வாட்டர் பாட்டில் சுத்தமாகும்.

👍இதனை செய்து முடித்த பிறகு நீங்கள் சோப்பினை கொண்டு மேல் பகுதியை நன்கு சுத்தம் செய்து தேய்த்துக் கழுவலாம்.

--Advertisement--

👍பாட்டிலின் உள்பகுதி மற்றும் சைடு பகுதிகளில் நீங்கள் கழுவும் போது பிரஷை பயன்படுத்துவதன் மூலம் கூடுதலாக இருக்கும் அழுக்குகள் பிரஷ் மூலம் தேய்க்கப்பட்டு மிக எளிதில் வெளியேறிவிடும். இதற்காக நீங்கள் பாட்டில் கழுவ பயன்படுத்தும் பிரஸ்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

👍இதனை அடுத்து மீண்டும் ஒருமுறை வெந்நீரைக் கொண்டு வாட்டர் பாட்டிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை நீங்கள் சுத்தம் செய்யலாம். மேலும் வெந்நீரைக் கொண்டு சுத்தம் செய்யும் போது சோப்பு வாடை இருந்தாலும் அது நீங்கிவிடும்.

👍இப்படி சுத்தம் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்களை நீங்கள் நல்ல காற்றோட்ட வசதி உள்ள பகுதியில் வைத்து உலர விடவும். சிறிது நேரம் வெயிலில் வைத்திருந்தாலும் தவறு இல்லை. வாரம் ஒரு முறை உங்கள் வாட்டர் பாட்டிலை இவ்வாறு நீங்கள் கழுவுவதின் மூலம் எண்ணற்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

👍மேலும் தண்ணீர் பாட்டில்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை தவிர்க்க நீங்கள் தண்ணீரைத் தவிர ஜூஸ் போன்ற பொருட்களை ஊற்றி பயன்படுத்தக்கூடாது.

தினமும் உங்கள் வாட்டர் பாட்டில்களை கழுவுவதன் மூலம் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். இதனை அடுத்து வாரம் ஒரு முறை நீங்கள் மேற்கூறியபடி சுத்தம் செய்தால் கட்டாயம் பாக்டீரியாக்களின் தொற்றுகள் உங்கள் வாட்டர் பாட்டில்களில் கட்டாயம் இருக்காது.

Continue Reading
 

More in

Trending Now

To Top