Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இளநரையை நீக்க உதவும் ஆயுர்வேதிக் டிப்ஸ்..!” – கட்டாயம் யூஸ் பண்ணுங்க..!

இன்று இருக்கும் இளம் தலைமுறைக்கு அவர்களின் தன்னம்பிக்கையை தகர்க்க கூடிய வகையில் இளநரை பிரச்சனை ஏற்பட்டு அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.

 அப்படிப்பட்ட இளநரை பிரச்சனைகளில் இருந்து இயற்கையான முறையில் அதனை சரி செய்யக்கூடிய சில முக்கியமான ஆயுர்வேதிக் குறிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

இளநரையை போக்கும் ஆயுர்வேதிக் குறிப்புகள்

உங்கள் இளநரையை போக்கக்கூடிய பணியை வெந்தயம் மற்றும் வெல்லம் செய்யும் என்றால் அதை உங்களால் நம்ப முடியுமா? ஆனால் உண்மை இது தான். உங்கள் நரைமுடி இயற்கையாகவே கருமையாக மாற வெந்தயத்தோடு வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்கள் முடி உதிர்வு நீங்கி, இளநரை மாறி உங்கள் கூந்தல் பளபளப்பாக மாறும்.

அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தை முதல் நாள் ஊறவைத்து இரவு முழுவதும் ஊறிய அந்த நீரை எடுத்து நீங்கள் உங்கள் தலைமுடியை நன்கு அலசவும். இப்படி செய்வதின் மூலம் உங்கள் இளநரை பிரச்சனை நீங்கிவிடும்.

வெங்காயச் சாறை எடுத்து அதை உங்கள் நரைமுடியில் நன்கு வேர் கால்கள் வரை படும் படி பூசி விடுங்கள். இப்படியே தொடர்ந்து நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் இளநரை கருப்பு முடி போல மாறிவிடும்.

--Advertisement--

நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை நன்கு உலர்த்தி பொடி செய்து கொண்டு அதை நீங்கள் தேங்காய் எண்ணெயோடு கலந்து உங்கள் நரை முடிகளில் தேய்க்கும் போது உங்கள் நரைமுடி டை அடித்தது போல கருமையாக மாறிவிடும்.

கருவேப்பிலையை அதிக அளவு உங்கள் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள் அதுமட்டுமல்லாமல் கருவேப்பிலையை எண்ணெயாக காய்ச்சி உங்கள் கூந்தலுக்கு தடவி வர இளநரை பிரச்சனையை தீர்த்து, உங்கள் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

மேற்கூறிய இந்த குறிப்புக்களை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயம் உங்கள் இளநரை பிரச்சனைகளில் இருந்து மிக விரைவில் விடுதலை அடைய முடியும். எனவே இயற்கையான முறையில் உங்கள் இளநிறைகளை மாற்றக்கூடிய இந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும். அனாவசியமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தி தரும் மற்ற பொருட்களை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.

Continue Reading
 

More in

Trending Now

To Top