“சித்திரைக் கனிக்கு வாங்கிய மாம்பழத்தில் செய்யலாமா? – மாம்பழ அல்வா..!

மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான்.குறிப்பாக வகை வகையான  மாம்பழங்களை வாங்கி அதை சாப்பிடுவதில் மும்மரமாக இருப்பார்கள். அந்த வகையில்  சித்திரை கனிக்கு வாங்கிய மாம்பழத்தைக் கொண்டு மாம்பழ அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த சமையல் பதிவில் விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Mango Halwa

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாம்பழ அல்வாவின் சுவையை ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும், மீண்டும் சுவைக்க ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட மாம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போமா.

மாம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்

1.மாம்பழக் கூழ் ஒரு கப்

2.சர்க்கரை கால் கப்

3.நெய் 3 டீஸ்பூன்

--Advertisement--

4.முந்திரி பருப்பு 10

செய்முறை

Mango Halwa

முதலில் நன்கு பழுத்த மாம்பழத்தை எடுத்துக் கொண்டு அதை சிறப்பாக கழுவி பால் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதன் தசை பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். தசைப்பகுதியை எடுப்பதற்கு நீங்கள் தோலை சீவி எடுத்து விடுவது மிகவும் நல்லது. அப்போது தான் மாம்பழக் போல் நன்றாக இருக்கும்.

இதனை அடுத்து நீங்கள் ஒரு கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து இதில் மாம்பழ கூழை போட்டு மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை வேக விடுங்கள். மாம்பழக் கூழ் வெந்த பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து மிதமான தீயில் கிளறி விடவும்.

இப்போது மாம்பழக் கூழ் மற்றும் சர்க்கரையும் ஒன்றாக கலந்த பதத்தில் கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது நீங்கள் அந்த கலவை கட்டி சேராமல் இருக்க ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு விட்டு கிளறுங்கள்.

Mango Halwa

இதனை அடுத்து ஒரு காலகட்டத்தில் இந்த கலவையானது பந்து போல எழும்பி வரும். மேலும் விட்ட நெய் அப்படியே வெளியே வரக்கூடிய பதத்திற்கு வந்தவுடன் நீங்கள் அடுப்பை அணைத்துவிட்டு மீதி இருக்கும் நெய்யையும் விட்டு நன்கு கிளறி விடவும்.

இதனை அடுத்து நீங்கள் அடுப்பில் முந்திரியை போட்டு வறுத்து அதை இந்த மாம்பழ அல்வா உடன் சேர்த்து கிளறினால் அனைவரும் விரும்பும் மாம்பழ அல்வா தயார்.