Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தஞ்சை புகழ் தவல வடை..! ஈஸியா உங்க வீட்டில் செய்யுங்க..!!

கோவில்கள் அதிகம் இருக்கும் தஞ்சை மாநகரில் புகழ்பெற்ற தவல வடை அனைவரும் விரும்பும் உணவு பண்டங்கள் ஒன்றாக உள்ளது. தஞ்சாவூர் பொம்மையைப் போல தஞ்சைக்கு புகழ் சேர்க்கும் இந்த தவல வடையை மிகவும் எளிதில் செய்யலாம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் விரும்பி சாப்பிடும் இந்த தவல வடையை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்

தவல வடை செய்ய தேவையான பொருட்கள்

1.அரிசி 200 கிராம்

2.பருப்பு 200 கிராம்

3.மிளகு அரை டேபிள்ஸ்பூன்

--Advertisement--

4.உப்பு தேவையான அளவு

5.சீரகம் அரை டேபிள்ஸ்பூன்

தாளிக்க

6.கடுகு

7.உளுத்தம் பருப்பு

8.தேவையான அளவு எண்ணெய்

9.தேங்காய் துருவல் கால் கப்

செய்முறை

முதலில் மேற்கூறிய பொருட்களான அரிசி, பருப்பு இவற்றை நன்கு கழுவி குறைந்தபட்சம் 3:30 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனை நீங்கள் அரைக்கும் போது அதனோடு மிளகு, சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து நீங்கள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான எண்ணெயை விட்டு எண்ணெய் சூடாகிய பிறகு கடுகினை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

கடுகு பொரிந்த உடன் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன் நிறமாகும் வரை வறுத்து விடவும். பிறகு இந்த இரண்டுடன் பெருங்காயத் தூளை சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனோடு துருவி வைத்திருக்கும் தேங்காயையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். மேலும் இந்த கலவையை நீங்கள் அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்.

 பிறகு நீங்கள் அடுப்பில் வாணலியை வைத்து இந்த மாவை வாழை இலையில் தட்டி வாணலியில் போட்டு வேக தேவையான அளவு எண்ணெயை ஊற்றி மொரு மொறுப்பாக வேகவிட்டு எடுத்தால் தவல வடை ரெடி.

இதுபோல நீங்களும் உங்கள் வீட்டில் இந்த வடையை எளிதாக செய்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து அசத்துங்கள் கண்டிப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top