“புதிய தோசை கல்..!” – இப்படி பழக்கினால் தோசை மொறு மொறு என வரும்..!

வீட்டில் புதிதாக தோசை கல் வாங்கி வைத்திருந்தால் அந்த தோசை கல்லை நீங்கள் பழக்காமல் தோசை ஊற்றும்போது அது சரியாக தோசை கல்லில் இருந்து மேலே எழும்பி வராது.

மேலும் உங்கள் இரும்பு தோசை கல்லை பழக்குவதின் மூலம் தான் எளிதாக தோசை கல்லை பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் கிரிஸ்பியாக தோசை வர நீங்கள் கீழே இருக்கக்கூடிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டு தோசை கல்லை பழக்கப்படுத்தி மொறு, மொறு தோசையை வார்த்தை எடுங்கள்.

new dosa dawa

அதற்காக நீங்கள் புதிய தோசை கல்லை வாங்கி வந்தவுடன் அதில் தோசை ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி சோப்பை போட்டு இரண்டு முதல் நான்கு முறை நன்கு கழுவி எடுக்க வேண்டும். அதோடு இரும்பு மஞ்சி போட்டு கீறல் விடும்படி நீங்கள் கழுவ வேண்டாம்.

உங்கள் தோசை கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சிறிதளவு நீரை ஊற்றி விடுங்கள். அந்த நீர் வற்றிய பிறகு தேங்காய் மஞ்சள் கொண்டு எல்லா இடங்களிலும் நன்கு தேய்த்து விடுங்கள். பிறகு ஒரு கத்தியில் சின்ன வெங்காயத்தை பாதி அளவு உரித்து கத்தியில் சொருகியபடி எல்லா பகுதிகளிலும் தேய்த்து விட வேண்டும்.

new dosa dawa

மேலும் வெங்காயத்தை தேய்த்த பிறகு எல்லா பகுதிகளிலும் தேங்காய் எண்ணெயை விட்டு தேங்காய் மஞ்சையை கொண்டு நன்கு அழுத்தம் கொடுத்து தேய்த்து விடுங்கள்.

--Advertisement--

பின்னர் ஒரு காட்டன் துணியைக் கொண்டு இதை முற்றிலும் துடைத்துவிட்டு நன்கு கழுவி விட்டு அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்து தோசை ஊற்றலாம்.

new dosa dawa

 முதல் தோசையை நீங்கள் சாப்பிடக்கூடாது அப்படியே எடுத்து தூர போட்டு விடுங்கள் .இரண்டாவது தோசை நீங்கள் பயன்படுத்த வேண்டாம் .மூன்றாவது தோசையை ஊத்தி பக்குவமாக நீங்கள் எடுத்தால் அதை பயன்படுத்தலாம்.

இப்படி செய்வதின் மூலம் எளிதாக உங்கள் தோசைக்கல் பழகி நல்ல முறையில் தோசை வரும். இந்த குறிப்புக்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் சூப்பராக தோசை மொறுமொறுவென்று உங்களால் சுட முடியும்.