தினமும் இதை பண்ணும் பழக்கம் இருக்கு.. அது நடிகைகளுக்கு சாமி மாதிரி.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா..

தினமும் இதை பண்ணும் பழக்கம் இருக்கு.. அது நடிகைகளுக்கு சாமி மாதிரி.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா…

கேரளத்து வரவான நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்து தான் நடிகையானார்.

அந்த படத்தில் நயன்தாராவின் தோற்றம், நடிப்பு உள்ளிட்டவை தமிழ் மக்கள் மனதை கவர்ந்தது. ஐயா, சந்திரமுகி, சிவகாசி, கஜினி, வல்லவன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், ஆதவன், வில்லு, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி என பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றுக்கொண்டார்.

nayanthara

இதனிடையே பிரபு தேவாவை காதலித்து படு மோசமாக விமர்சிக்கப்பட்டு அவமானப்பட்டார்.ஒரு கட்டத்தில் தான் பெரிதும் நம்பி சமுதாயத்தை எதிர்த்து, குடும்பத்தை எதிர்த்து ரகசிய திருமணம் செய்துக்கொண்ட கணவன், மனைவியாக வாழ்ந்து வந்த நேரத்தில் பிரபு தேவா திடீரென நயன்தாராவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா. அதிலிருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் நடிக்கத்துவங்கினார். பின்னர் நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக பழகி அவரை காதலித்து அப்படி இப்படி இருந்த புகைப்படங்கள் லிப்லாக் போட்டோ உள்ளிட்டவை சுச்சி லீக்சில் வெளியாகி மோசமாக விமர்சிக்கப்பட்டு அவப்பெயர் சம்பாதித்தார்.

இதையும் படியுங்கள்: சத்தியமா விஜய் அப்படி பண்ணுவாருன்னு நான் நெனைக்கல.. சொல்லாமலே இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..

பின்னர் தவறை உணர்ந்து காதலை உதறித்தள்ளிவிட்டு மீண்டும் நடிக்க துவங்கினார். அதன் பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘நானும் ரௌடி’ தான் படத்தில் நடிக்கும் போது, விக்கியை காதலிக்க துவங்கினார்.

6 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2022-ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது சென்னை ERC, மகாபாலி புறத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.

விக்கி – நயன் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர். அதன் பின்னர் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தார். அவ்வப்போது தன்னுடைய மகனின் செல்ல சேட்டைகளின் புகைப்படம் , வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்.

nayanthara

இந்நிலையில் நயன்தாரா பேட்டி ஒன்றில் தினமும் நடிகைகள் செய்யும் பழக்கம் குறித்து பேசியிருக்கிறார். நடிகைகளாகிய எங்களுக்கு வாழ்க்கையே மேக்கப் தான். சொல்லப்போனால், அது எங்களுக்கு கடவுள் மாதிரி. நாங்கள் ஷூட்டிங்கில் மேக்கப் போட ஆரம்பிக்கும்போது அதை தொட்டு கும்பிட்டு, கடவுளிடம் வழிபட்டு தான் ஆரம்பிப்போம் என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.