Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“உங்க வீட்டில குழந்தைக இருக்கா..!” – அப்ப இந்த செடிகளை அவாய்ட் பண்ணுங்க..

இன்று பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அவர்கள் வீடுகளில் செடிகளை வளர்ப்பதற்கு விரும்புகிறார்கள். பொதுவாக இப்போது இந்த செடி வளர்ப்பில் இண்டோர் பிளான்ட்ஸ், அவுட் டோர் பிளாண்ட்ஸ் என்று இரண்டு வகைகளாக பிரித்து வீட்டுக்குள் சில செடிகளையும், வீட்டுக்கு வெளியே செடிகளையும் மிகுந்த ஆர்வத்தோடு வளர்த்து வருகிறார்கள்.

இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல் மனதிற்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த வகையில் உங்கள் வீடுகளில் நீங்கள் இதுபோன்ற செடிகளை வளர்க்க முற்படும்போது குழந்தைகள் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய செடிகளை தயவு செய்து வளர்க்க வேண்டாம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் தவிர்க்க வேண்டிய தாவரங்கள்

1.ஃபிலோடென்ட்ரான் (Philodendron)

இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிதானது பார்ப்பதற்கும் மிகவும் அழகிய தோற்றத்தில் இந்த செடி இருக்கும். எனினும் இந்த செடியில் கால்சியம் ஆக்சிலேட் படிகங்கள் அதிக அளவு இருப்பதால் இது குழந்தைகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தில் இந்த செடிகளை வளர்க்க வேண்டாம். அப்படி வளர்த்தாலும் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் உயரமான பகுதியில் தொங்கவிட்டு வளருங்கள்.

--Advertisement--

2.போத்தோஸ் (Pothos)

பேய்களின் கொடி என்று அழைக்கப்படக்கூடிய இந்த தாவரம் எளிதில் காற்றினை சுத்தப்படுத்தக்கூடிய ஆற்றல் இருப்பதால் தூய்மையான காற்றை வீட்டுக்குள் அளிக்கும் என்பதால் பலரும் இந்த தாவரத்தை வளர்ப்பதற்கு பரிந்துரை செய்வார்கள்.

குழந்தைகள் இருக்கக்கூடிய வீட்டில் தெரியாமல் குழந்தைகள் இந்த தாவரத்தை எடுத்து உட்கொண்டால் வாயில் எரிச்சல், உதடு தொண்டைகளில் வீக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் இந்த செடியினை உங்கள் வீட்டில் வளர்க்க யோசிக்க வேண்டும்.

3.கலாடியம் (Caladium)

யானைகளின் காது போல மிக நீளமான இலைகளை கொண்டிருக்கும் கலாடியம் செடி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பல வகையான வண்ணங்களில் இந்த செடி இருப்பதால் அனைவரும் இதை விரும்புவார்கள். குறிப்பாக இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய செடிகளை அனைவரும் வீட்டில் வளர்ப்பதற்கு போட்டி போடுவார்கள்.

 இந்த கலாடியம் செடி குழந்தைகளின் வாய், தொண்டை, நாக்கு போன்ற பகுதிகளில் பட்டுவிட்டால் வலி எரிச்சல் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் மூச்சு விடுதல், பேசுவதில் சிரமத்தை தரும். எனவே சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய எந்த செடிகள் குழந்தைகள் இருக்கக்கூடிய வீடுகளில் தவிர்ப்பது மிகவும் நல்லது.

Continue Reading
 

More in

Trending Now

To Top