Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நேரமே சரியில்லை போல..! – நயன்தாராவின் நிலைமயை பாருங்க மக்களே..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படம் வேற எந்த படமும் இல்லை அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஜவான் படம்தான்.

சமீபமாக ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடி வசூல் செய்த படம் திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். மேலும் கடந்த சில காலங்களாக ஹிந்தியில் எந்த படமும் சரியாக ஓடாத நிலையில் இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலித்து இருப்பது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் நயன்தாரா தன்னுடைய படப்பிடிப்பை முடித்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில் மும்பை விமான நிலையத்தில் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் கடந்த வாரம் வைரலாக சென்றது.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது தன்னுடைய சம்பளத்தை வெகுவாக குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த சில படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சொல்லும்படி அந்த அளவிற்கு ஓடாததால் தற்போது தன்னுடைய சம்பளத்தை குறைத்த தாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. தற்பொழுது சில காரணங்களால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் கலந்துகொள்ள முடியாததாலும், கடந்த சில படங்கள் சரியாக ஓடாததால் இந்த மார்க்கெட் சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

--Advertisement--

இந்தப் படத்தை முடித்துவிட்டு இதற்கு அடுத்த படமாக ஆடை திரைப்படம் இயக்குனர் ரத்தின குமாரி ஒரு புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இதுவரை நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் சூர்யா போன்றவர்களுடன் நடித்தவர், தற்போது ராகவா லாரன்ஸ் உடன் நடிப்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தயாராகிவரும் “லியோ” திரைப்படத்தில் ரைட்டர் ஆக இருப்பவர் ரத்தினகுமார் ஆகவே அந்த படிப்பு முடிந்த பின் இந்த புதிய படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top