Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

30 வருஷம் ஆகியும் கமல் படங்களில் நடிக்க மறுக்கும் ஜனகராஜ்..!காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.. என்ற வசனத்தின் மூலம் பிரபலமான காமெடி நடிகராக மாறிய ஜனகராஜ் 80-கால கட்டங்களில் படு பிஸியாக நடித்த நடிகர்.

ஜனகராஜ் அதிகளவு தமிழ் ரசிகர்களை கொண்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தியவர். அது மட்டுமல்லாமல் காமெடியில் கலக்கி வந்த கவுண்டமணி, செந்திலுக்கு போட்டியாக இருந்தவர்.

எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கிய இவருக்கு முக வாத நோயால் பாதிப்பு ஏற்பட்டு வாய் கோணலாக மாறி இருந்தாலும், இந்த மூஞ்சிக்கு எல்லாம் யார் நடிக்க சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கேட்டவர்களின் முகத்தில் கரியை பூசக்கூடிய விதத்தில் தனது முயற்சியை கைவிடாமல் இருந்ததின் காரணத்தால் சினிமா வாய்ப்புகளை பெற்றார்.

எனக்கு என்று ஓர் உடல் மொழியையும், குரலையும் மாற்றி அமைத்துக் கொண்ட இவருக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து பல படங்களில் கேப் இல்லாமல் நடிக்க கூடிய அளவு வாய்ப்புகள் குவிந்தது.

இந்த நடிகரை கவனித்துக் கொள்ள உதவி இயக்குனரான மனோபாலாவை பாரதிராஜா எப்போதும் அனுப்பி வைப்பாராம். அது மட்டுமல்லாமல் ஸ்கிரிப்ட் மற்றும் ஷூட்டிங் வேலை செய்வதை விட ஜனகராஜுக்கு அதிக அளவு மனோபாலா உதவி செய்திருக்கிறார்.

--Advertisement--

இந்நிலையில் ஜனகராஜ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. பல ஆண்டுகள் உடல் நல குறைவால் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜனகராஜ் 96 படத்தில் வாட்ச்மேன் ஆக நடித்திருந்தது நினைவில் இருக்கலாம்.

கமலஹாசனோடு நடித்து வந்த ஜனகராஜ் ஒரு காலத்தில் கமலோடு நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். மேலும் கமலோடு குணா படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதற்கு காரணம் என்ன என்று தெரியுமா?

சுமார் 30 ஆண்டுகள் கமலை விட்டு ஒதுங்கி இருக்க காரணமாக இருந்த இயக்குனர் சந்தான பாரதி. இவர் ஜனகராஜ் டப்பிங் பேசியது பிடிக்காமல் மீண்டும், மீண்டும் பேச வலியுறுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜனகராஜ் பேசியும், அது சரியில்லை இது சரியில்லை, என்று கூறிவிட்டார்.

இதனால் கோபம் அடைந்த ஜனகராஜ் இயக்குனர் சந்தன பாரதியுடன் விளையாட்டாக பேச அது சண்டையில் முடிந்தது. இதனை அடுத்து டப்பிங் அறையில் இருந்து கோபத்தோடு வெளியேறி இருக்கிறார்.

மேலும் ஜனகராஜ் நடிப்பதும் நன்றாக இல்லை என்று இயக்குனர் மீண்டும் சொன்ன காரணத்தினால் கோபம் கொண்ட ஜனகராஜ் அதனை அதன் பின்பு கமலஹாசன் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்த விஷயம் தான் இணையத்தில் லீக் ஆகி அவர் கமலஹாசனோடு நடிக்காததற்கு காரணம் இது தான் என்பதை ரசிகர்களுக்கு படம் பிடித்து காட்டி விட்டது.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top