பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை கயல் ஆனந்தி.

கயல் ஆனந்தி

கடந்த 2012ம் ஆண்டில், தெலுங்கில் பஸ் ஸ்டாப் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. அடுத்து 2 தெலுங்கு படங்களில் நடித்த அவர், பிறகு தமிழில் 2014ம் ஆண்டில் பொறியாளன் என் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அடுத்து கயல் படத்தில் நடித்த ஆனந்தி, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியதால், கயல் ஆனந்தி என்றே அழைக்கப்படுகிறார்.

முக்கிய நாயகி

தொடர்ந்து விசாரணை, திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சண்டி வீரன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நாயகியாக மாறினார்.

கடந்த 2021ம் ஆண்டில், சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் உள்ளார்.

இந்நிலையில், மீண்டும் மங்கை என்ற படத்தின் மூலம் கயல் ஆனந்தி தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆகிறார்.

மங்கை

குபேந்திரன் காமாட்சி டைரக்ட் செய்துள்ள மங்கை படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இது நாயகியை மையப்படுத்தி எடுக்கிற படமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:  காசுக்காக இப்படி பண்ணலாமா.. கிரணுக்கு கிளாஸ் எடுத்த ஷகிலா.. ரசிகர்கள் குபீர்..

மங்கை படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர், பிக்பாஸ் ஷிவின், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிடா படத்தின் இசையமைப்பாளர் தீசன், இந்த படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

10 ஆண்டுகள் கழிந்த நிலையில்…

மங்கை படத்தில் நடித்தது குறித்து நடிகை கயல் ஆனந்தி கூறியதாவது, நான் நடித்த கயல் படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போது மங்கை படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அதனால் ஸ்பெஷலாக பார்க்கிறேன்.

எனக்கு ஒன்றும் தெரியாது

நான் 10ம் வகுப்பு படிக்கும்போதே நடிக்க வந்துவிட்டேன். அப்போதும் சினிமாவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இப்போதும் சினிமா பற்றி எனக்கு ஒன்றும் பெரிதாக தெரியாது. இப்போதுதான் சினிமாவை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

நான் நடித்த படங்களை திரும்ப பார்க்கும்போது நிறைய சந்தோஷமாக இருக்கும். இந்த படத்தின் மூலம் என் கேரியர் ஒருபடி மேலே உயர்ந்திருக்கும் முன்னேறி இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

நல்ல படங்கள் என்றாலே, ரசிகர்கள் அந்த படங்களை வெற்றி பெறச் செய்வார்கள். அந்த வகையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன், என்றார்.

இதையும் படியுங்கள்: என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

பத்து படங்களுக்கு மேல் நடித்தவர் கயல் ஆனந்தி. ஆனால் பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் எனக்கு சினிமா தெரியல என்று கூச்சமின்றி கூறியதால் பலரும் கயல் ஆனந்தியை கலாய்த்து வருகின்றனர்.