நின்று போன KPY பாலா திருமணம்.. பெண் வீட்டார் போட்ட கண்டிஷன்.. மனமுடைந்த பாலா..

நின்று போன KPY பாலா திருமணம்.. பெண் வீட்டார் போட்ட கண்டிஷன்.. மனமுடைந்த பாலா..

வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு, ஏழ்மையில் தவிப்பவர்களுக்கு, இல்லாதப்பட்டவர்களுக்கு, பிறருக்கு உதவும் மனிதர்களை கடவுளுக்கு ஒப்பிட்டு சொல்வதுதான் மனித பண்பு.

இறைவன் எனக்கு நேரில் வந்து இதுவரை உதவியது இல்லை. எப்போதெல்லாம் நான் நெருக்கடியான வாழ்க்கையில் தவிக்கிறானோ, பிறரது உதவியை எதிர்பார்க்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு உதவுபவர்கள், மனித வடிவில் வந்த தெய்வங்களாக தான் எனக்கு தெரிகின்றனர் என்று சிலர் சொல்வதுண்டு.

KPY பாலா திருமணம்

KPY பாலா அப்படிப்பட்டவராக தான் பலருக்கும் உதவிக்கொண்டு இருக்கிறார். கலக்கப் போவது என்ற விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அவர், கலக்கப் போவது யாரு பாலா, அதாவது KPY பாலா என்றே அழைக்கப்படுகிறார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அவ்வப்போது சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் KPY பாலா, சினிமா கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். டைமிங் காமெடியாக பேசி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அதனால் நல்ல வருமானம் பெற்று வருகிறார்.

நிறைய உதவிகள்

கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதில் அலாதியான ஆர்வம் கொண்ட KPY பாலா, மலைவாழ் கிராம மக்களுக்காக இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி தந்திருக்கிறார். மாற்றுத்திறனாளி பட்டதாரி வாலிபர் ஒருவருக்கு வேலைக்கு சென்று வர 3 சக்கர ஸ்கூட்டர் சமீபத்தில் வாங்கி தந்தார். அதுமட்டுமின்றி வறுமையில் தவிப்பதாக சொன்ன பெண்மணி ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் ஆட்டோ வாங்கி தந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மனைவியை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அனுப்பிவிட்டு.. இளம் நடிகையுடன் நெருப்பு இயக்குனர்.. நூதனமாக நடக்கும் Swapping..

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்கும் ஊழியர், சைக்கிள் வாங்கித் தரக்கூட எனக்கு யாரும் இல்லை என்று சொல்ல அடுத்த சில தினங்களுக்கு பின், அந்த பெட்ரோல் பங்க் ஊழியருக்கு புது பைக் வாங்கிக் கொடுத்தார் KPY பாலா.

ஓடோடிப் போய் உதவி

சென்னையில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை தன் சொந்த பணத்தை நிவாரணமாக பகிர்ந்துக் கொடுத்தார் KPY பாலா. ஓடோடி போய் அவர் உதவி செய்த வீடியோக்கள், செம வைரலாகின.

பெண் வீட்டார் கண்டிசன்

இந்நிலையில், அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், திருமணம் ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென பெண் வீட்டார் கண்டிசன் போட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: “என்னோட தொப்புளில் அதை பண்ணும் போது..” வெக்கத்துடன் ரகசியம் உடைத்த சுகன்யா..!

அதாவது KPY பாலா தனது வருமானத்தில் 60 சதவீதம் வரை இதுபோல் உதவிகள் செய்வதற்கு என்றே செலவழிக்கிறார். திருமணம் செய்த பிறகும் இதே போல் மற்றவர்களுக்கு வருகிற வருமானத்தில் பெரும்பகுதி பணத்தை வாரி வாரி கொடுத்து மற்றவர்களுக்கு உதவிக்கொண்டே இருந்தால், கடைசி காலத்தில் என் மகள்தான் வறுமையில் கஷ்டப்படுவார் என, திருமணமே வேண்டாம் என கூறிவிட்டனர்.

திருமணம் நின்று போனது

இதனால் KPY பாலாவுக்கு நடக்க வேண்டிய திருமணம் நின்று போய்விட்டது. கெட்டது செய்யும் மனிதர்களை மட்டுமல்ல, சில நேரங்களில் நல்லது செய்யும் மனிதர்களும் கூட புறக்கணிப்படுவார்கள் என்பதற்கு KPY பாலா மிகச்சிறந்த உதாரணமாக தெரிகிறார்.

நின்று போன KPY பாலாவின் திருமணம் பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. பெண் வீட்டார் போட்ட கண்டிஷனால் மனமுடைந்த பாலா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.