KPY பாலா ஒரு பப்ளிசிட்டி பைத்தியம்.. இவ்ளோ பணம் இப்படித்தான்..! ஓப்பனாக பேசிய பிரபலம்..!

இதுவரை மக்களின் நன்மைக்காகவும், மக்கள் மீது கொண்ட பேரன்பினாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு சிறந்த குணத்தாலும் KPY பாலா மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்கிறார் என்ற ஒரு கருத்துதான் பலரது மனதில் இருந்து வந்தது.

ஏனெனில் அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதற்கே பயன்படுத்தினார் என்பது, பலருக்கும் ஒரு மகிழ்வை அவர் மீதான ஒரு பெருமையை உணர்த்துவதாக இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட மற்றவர்களுக்கு உதவ முன் வராத நிலையில், தன் ரசிகர்களுக்கு மருத்துவ உதவி, கல்வித் தொகை என எந்த விதத்திலும் உதவ முன்வருவதில்லை.

KPY பாலா

இந்நிலையில், KPY பாலா தனது சம்பளத்தில் பெரும்பகுதியை, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அதிக அக்கறை காட்டினார்.

மலைகிராம மக்களுக்கு ஆபத்து நேரங்களில் உதவ ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி கொடுத்தார் KPY பாலா. வறுமையில் வாடிய பெண்ணுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்தார்.

--Advertisement--

பெட்ரோல் பங்கில், எனக்கு சொந்தமாக சைக்கிள் கூட இல்லை என்று புலம்பிய வாலிபர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்தார். இப்படி மற்றவர்களுக்கு உதவுவதையே தன் வாழ்க்கையில் லட்சியமாக கொண்டிருந்த KPY பாலா மீது பலரும், மிகப்பெரிய ஒரு அபிமானத்தை, மரியாதையை வைத்திருந்தனர் என்றால் அது மிகையல்ல.

செய்யாறு பாலு

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது,

சமீபத்தில் ஒரு மேடையில் நடிகர் ராகவா லாரன்ஸ், KPY பாலா பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், உன்னுடைய ஆசை என்ன என்று ராகவா லாரன்ஸ் கேட்டபோது, சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று KPY பாலாசொன்னார்.

ஹீரோவாக நடிக்க ஆசை

எதற்காக இப்படி நீ ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று ராகவா லாரன்ஸ் கேட்டபோது, நான் ஹீரோவானால் இன்னும் நிறைய கோடி கணக்கில் சம்பாதிப்பேன்.

அப்போது இன்னும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்வேன். மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாவேன். என்னுடைய புகழ் அதிகரிக்கும் என்கிற வகையில் KPY பாலா பதில் அளித்தார்.

சரி என்னுடைய தயாரிப்பில், உன்னை ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என ராகவா லாரன்ஸ்சும் உறுதிமொழி தந்தார்.

பப்ளிசிட்டி இதற்காக தானா?

இதை பார்த்த பலருக்கும், சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பப்ளிசிட்டிக்காக தான் KPY பாலா இந்த அளவுக்கு உதவி செய்து, சோஷியல் மீடியாக்கள் மூலமாக தன்னை முன் நிறுத்திக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் யாராவது தந்த பிளாக் மணியை தான், KPY பாலா இப்படி உதவிகள் செய்ய பயன்படுத்தினாரா, என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.

ஏனெனில் இதற்கு முன்பு நடிகர்கள் ரித்திஷ், பவர் ஸ்டார் போன்றவர்கள் இதே போல் தான் தன்னை கோமாளியாக காட்டிக் கொண்டு ஆரம்பித்து சினிமாவில் நடித்து, பின்னர் படிப்படியாக உயர்ந்து தன் மீதான நெகட்டிவ் விஷயங்களை எல்லாம் பாசிட்டிவாக மாற்றிக்கொண்டனர்.கடைசியில் ரித்திஷ் திமுக எம்பி யாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி இதுதானா?

அதேபோல் KPY பாலாவும் மக்களுக்கு உதவிகள் செய்துவிட்டு, அதன் மூலம் கிடைத்த பப்ளிசிடியை பயன்படுத்தி, சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் வந்து விட்டாரா என்று சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.

ஆனால் அவர் ஒரு வேளை சினிமாவில் நடித்து பெரிய நடிகராகி கோடி, கோடியாக சம்பாதித்து இதேபோல் மக்களுக்கு உதவினார் என்றால், அது மிகப்பெரிய மகிழ்ச்சி தான் என்று இது குறித்து நேர்காணலில் பேசிய சினிமா மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு குறிப்பிட்டு பேசியுள்ளார்.

பப்ளிசிட்டி பைத்தியம்

அதே வேளையில், KPY பாலா ஒரு பப்ளிசிட்டி பைத்தியம்.. ஒரு வேளை உதவி செய்ய இவ்ளோ பணம் கருப்பு பணமாக வந்தது என்பது உண்மைதானா என்ற கோணங்களில் வெளிப்படையாக செய்யாறு பாலு இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.