குலதெய்வம் கோயிலுக்கு செல்லும்போது இந்த ஒரு பொருளை வாங்கி கொடுங்க..! – 100% ரிசல்ட்..!

குலத்தைக் காக்கும் தெய்வம் குலதெய்வம் போற்றும் விதமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குலதெய்வம் வழிபாடு இருக்கும். இந்த பரிகாரத்தை தவறாமல் செய்தால் அது நம் குலத்தை காக்கும்.

மேலும், நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் முதலில் நாம் குலதெய்வம் தான் வணங்குவோம். இப்பதிவில் குலதெய்வத்திற்கு எந்த ஒரு பொருள் வாங்கி கொடுத்தால் நம் வாழ்வில் வளம் பெற இப் பதிவில் காணலாம்.

குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது இந்த ஒரு பொருளை வாங்கி கொடுத்து வாருங்கள். நாம் எல்லோராலும் வாங்கக்கூடிய அந்த பொருள் வேறு எதுவும் அல்ல வெல்லம் தான்.

அதை உங்களால் முடிந்த அளவு உங்க குலதெய்வம் கோயிலுக்கு உங்க கையால் தானம் கொடுக்கலாம். குலதெய்வம் கோயில் கோவிலில் மடப்பள்ளி(பதி) இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம் .

இந்த வெள்ளத்தை குலதெய்வத்திற்காக பிரசாதம் செய்ய பயன்படுத்த வேண்டும். குறைந்த அளவு ஒரு கிலோ வெல்லம் வாங்கலாம் அதிகபட்சம் உங்களுடைய விருப்பம். எப்போதெல்லாம் குலதெய்வ கோயிலுக்கு போகிறீர்களோ அப்போது வீட்டில் இருந்து வெல்லத்தை எடுத்து செல்லவேணும். எனில், குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் முன்பே கடையில் இருந்து வாங்கி வந்து வீட்டில் வைத்து விட வேண்டும்.

--Advertisement--

குலதெய்வ கோவிலில் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று.. அல்லது செல்லும் வழியில் வெல்லம் வாங்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் மாதா மாதம் வீட்டில் பணம் சம்பாதிக்கும் நபர் மட்டுமாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த வெல்லத்தை சமர்ப்பணம் செய்து வர உங்களுடைய வீட்டில் இருக்கும் தடைகள் எல்லாம் எறும்பை கண்ட வெல்லம் போல சிறிது சிறிதாக காணமல் போய்விடும்.

மேலும், உங்களுடைய வீட்டில் நடக்கும் எல்லா விசேஷங்களுமே வெல்லம் போல இனிப்பாக நடந்து முடியும். குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு முன்கூட்டியே கடையில் இருந்து வெல்லத்தை வாங்க வீட்டில் வைக்க வேண்டாம்.

வெல்லம் மட்டும் அல்ல, குலதெய்வ கோயிலுக்கு என்று செல்லும் போது பூ, பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபர்தி, திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், தேங்காய் என பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து “என் வீட்டில் இருந்து உன்னை பார்க்க வரேன்.. அதே போல நீயும் உன் சன்னதியில் இருந்து என் வீட்டுக்கு வா..” என்று குலதெய்வத்தை வணங்கி அதன் பின் எடுத்து செல்லவேண்டும். அப்படி எடுத்து செல்லும் போது அந்த பூஜை பொருட்கள் மீது உங்களுடைய கால் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் குலதெய்வ கோயிலில் குளம் இருந்தால் இந்த வெள்ளத்தை ஒரு பிடி எடுத்து அதில் கரைத்தால் உங்கள் வாழ்வில் எல்லாம் நோய்களும் கஷ்டமும் தண்ணீரில் கலந்த வெல்லம் போல இருந்த இடம்தெரியாமல் போய் விடும்.

எந்த வேண்டுதலாக இருந்தாலும் நிச்சயமாக பலிக்கும். விரைவில் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக இந்த பிரசாதத்தை கொண்டு சென்று பூஜை செய்து வாருங்கள். உங்கள் குலதெய்வம் உங்களுடனேயே இருக்கும்.