கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை லட்சுமி மேனன் ( Lakshmi Menon ). துபாயைச் சேர்ந்த கலைஞர் ராமகிருஷ்ணன் மற்றும் கொச்சியை சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியை உஷாமேனன் ஆகியோருக்கு பிறந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன்.
பரதநாட்டிய கலையில் சிறந்து விளங்கிய நடிகை லட்சுமிமேனன் அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற ஆயத்தமானார். தன்னுடைய எட்டாம் வகுப்பிலேயே இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் மலையாளம் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற காரணத்தினால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

ஒரு காலத்தில் ராசியான நடிகை என்ற அந்தஸ்துடன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்தார் நடிகை லட்சுமி மேனன். ஆனால், ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகாத காரணத்தினால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தது.
மேலும் பிரபல நடிகரும் நடிகர் சங்க தலைவருமான விஷாலுடன் இவர் காதலில் இருந்தார் என்றும் கூறப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பவே நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இது குறித்த உண்மை தன்மை என்ன என்று தெரியவில்லை. வேதாளம் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

சிறந்த அறிமுக நடிகை சிறந்த நடிகை என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கும் நடிகை லட்சுமிமேனன் கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.
சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி பெரிய பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய லட்சுமி மேனன் உடல் எடை கூடி குண்டடித்து போயிருந்தார்.

ஆனால், தற்பொழுது உடல் எடை குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். இவருடைய இந்த சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லட்சுமி மேனன்னா இது..? நம்பவே முடியலையே..! என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.