Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உத்தரப்பிரதேச எய்ம்ஸ்க்கு 1500 கோடி மதுரை எய்ம்ஸ் 12 கோடி நிதி ஒதுக்கீடு – கொதிக்கும் மக்கள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அந்த இடம் வெறும் கட்டாந்தரையாகவே இப்போது வரை இருக்கிறது. ஏன் எனக் கேட்டால் நிதி பற்றாக்குறை என பாஜகவினர் பதில் கூறி வந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அரசிடம் இருந்து வந்த ஆதார தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளே ஆகியுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து பல வேறு அரசியல் நடந்தாலும், நடந்தாலும் அதில் அதிகமாக அரசியல் செய்தது திமுகவின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒரு செங்கலில் எய்ம்ஸ் என எழுதிக் கொண்டு ஊர் ஊராக பிரச்சாரம் சென்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள்.

இன்னமும் அந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டி முடிக்கப்படவில்லை அதற்கான வேலையும் ஆரம்பிக்கவில்லை.

கடந்த 17ஆம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவர் எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார் அதற்கு வந்த பதில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதன் தகவல் கீழே

--Advertisement--

ராக் பெரலி எய்ம்ஸ்- உத்திரபிரதேசம்- 665 கோடிகள்
மங்கலகிரி எய்ம்ஸ்- ஆந்திர பிரதேசம்-1289.62 கோடிகள்
நாக்பூர் எய்ம்ஸ்- மகாராஷ்டிரா-1218.92 கோடிகள்
கல்யாணி எய்ம்ஸ்- மேற்குவங்கம்-1362.10 கோடிகள்
கோரக்பூர் எய்ம்ஸ்- உத்திரபிரதேசம்-874.38 கோடிகள்
மதுரை எய்ம்ஸ்- தமிழ்நாடு- ( 12 ) கோடிகள்

இதை பார்த்தாலே தெரிகிறது தமிழ்நாட்டிற்கு மட்டும் வெறும் 12 கோடி ரூபாய் மற்ற மாநிலங்களுக்கு ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமான வருவாயை மத்திய அரசுக்கு கொடுக்கும் மாநிலங்களில் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி இல்லை என மத்திய அரசு கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கிஇருக்கிறது.

இதுபோல முக்கியமான அரசியல் தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top