“நசுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க.. தமிழ் சினிமா..” வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்..!

“நசுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க.. தமிழ் சினிமா..” வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்..!

தமிழ் சினிமா ஒரு காலத்தில் வித்தியாசமான கதை அம்சத்தோடு வெளி வந்தது. அது மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்து தென்னிந்திய மொழிகளில் வெளி வரும் சினிமாக்களிலேயே தரம் வாய்ந்ததாக இருந்தது.

இதையும் படிங்க: “பட வாய்ப்புக்காக படுக்குறது எல்லாம்.. அவங்களோட..” நடிகை லதா ராவ் நச் பேட்டி..!

அந்த வகையில் தற்போது மலையாளத்தில் வெளி வந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமானது வரலாறு காணாத சாதனையை படைத்து வசூல் வேட்டையில் மற்ற படங்களை சுருட்டி எறிந்து விட்டது.

தமிழ் சினிமா..

மலையாளத்தில் தற்போது வெளி வந்து சக்கை போடுகின்ற திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமானது தென்னிந்திய சினிமாவில் அதிகளவு வசூலில் சாதனை புரிந்த திரைப்படமாக மாறி தமிழ் திரை உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

--Advertisement--


இது வரை இந்த படம் வசூல் செய்த தொகையை சொன்னால் நீங்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விடுவீர்கள். அந்த அளவு ஏழு நாளில் 90 கோடி அளவு வசூல் செய்திருந்த இந்த திரைப்படம் தற்போது 100 கோடியை தொட்டுவிட்டது.

மஞ்சும்மல் பாய்ஸ்..

இந்தத் திரைப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் வெளி வந்த குணா திரைப்படத்தில் இடம் பிடித்த அந்த குணா குகையை நோக்கி செல்லும் நண்பர்களில் ஒருவர் அந்த குகையில் தொலைந்து விட அந்த நண்பனை எப்படி மீட்டு எடுக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை கரு.

இதனை அடுத்து இப்படி வித்தியாசகரமாக சிந்தனையை வெளிப்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ் படத்தோடு இணைந்து பணியாற்றிய அனைவரையும் உலகநாயகன் கமலஹாசன் அழைத்து அந்த பட குழுவை பாராட்டி இருக்கிறார்.


அது மட்டுமா? தமிழ் திரைப்படத்தின் உச்சகட்ட நாயகர்களாக கருதப்படும் தனுஷ், விக்ரம், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இந்த படத்தின் இயக்குனரை நேரில் சந்தித்து அவரது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.

வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்..

அத்தோடு இந்த திரைப்படம் உலக அளவில் தற்போது 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் 17.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்க அம்சமாகும். தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் படம் பெற்றுள்ளது.

இதனை அடுத்து ஒரு மலையாள திரைப்படம் தமிழ் சினிமாவில் 20 கோடி ரூபாய் அளவு வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் படங்கள் என்ன ஆனது. நசுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க.. என்ற சாதிய கண்ணோட்டத்திலேயே வெளியாகின்றன.


அப்படி இல்லை என்றால் குறிப்பிட்ட பெரிய ஹீரோவின் புகழைப் பாடும் ஒரு திரைப்படமாகவே திரைப்படங்கள் வெளி வருகின்றன. ஒரு படத்தின் பட்ஜெட் 150 கோடி என்றால் அதில் ஒரு ஹீரோவுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 கோடி, ஹீரோயினிக்கு சம்பளம் 5 கோடி, இயக்குனரது சம்பளம் 20 கோடி, இசையமைப்பாளரின் சம்பளம் 20 கோடி என 145 கோடி ரூபாய் சம்பளமாகவே சென்று விடக்கூடிய நிலையில் வெறும் 5 கோடியில் பணத்தை வைத்துக் கொண்டு படத்தை வெளியிடுகிறார்கள்.

இதையும் படிங்க: தீயாய் பரவும் ரஜினிகாந்தின் வீடியோ… விளாசும் ரசிகர்கள் என்ன நடந்தது..?

இந்த நிலைமை மாறி தமிழ் சினிமா விழித்துக் கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் தங்களுடைய மனக்குமுறல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பார்க்க முடிகிறது. எனவே தமிழ் சினிமா இனியாவது விழித்துக் கொள்ளுமா? இல்லை விழி பிதுங்கி நிற்குமா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.