Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மாவீரன் ரிலீஸ் தேதி..! – முன்னணி நடிகரின் படத்தை கண்டு பல்டி அடித்த சிவகார்த்திகேயன்..!

மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் ( Sivakarthikeyan ) நடிப்பில் மண்டேலா படைய இயக்குனர் மாடோன் அஸ்வின் இயக்கத்தில் இயக்கி வெளியேற இருக்கிறது. முழு படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் படம் இந்த திரைப்படம் ஆகும். கடைசியாக இவர் நடித்த நடிப்பில் வெளிவந்த டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி படங்களாக அமைந்தாலும் விமர்சன ரீதியாக பெரிதளவில் வெற்றி பெறவில்லை.

மாவீரன்

Sivakarthikeyan

எனவே இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் இதனுடைய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வருகின்ற ஜூன் மாதம் இந்த திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டு இருந்தனர்.

அப்பொழுது திடீரென நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

--Advertisement--

இதனால் வேறு வழி இன்றி சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டது பட குழு.

மாவீரன்

Sivakarthikeyan

அதனைத் தொடர்ந்து ரிலீஸ் வேலையில் இறங்கிய சிவகார்த்திகேயன் மும்முறமாக பார்த்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக தற்போது திடீரென நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் டீசர் வெளியானது.

இந்த டீசரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதை பார்த்த மாவீரன் பட குழு மற்றும் சிவகார்த்திகேயன் அதிர்ந்து போனார்கள்.

மாவீரன்

Sivakarthikeyan

ஏனென்றால் ஆகஸ்ட் பதினோராம் தேதி மாவீரன் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வந்து விடலாம் என எண்ணி இருந்த சிவகார்த்திகேயன் இந்த அறிவிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

மாவீரன்

Sivakarthikeyan

எனவே தற்போது அதிரடி முடிவாக மாவீரன் திரைப்படத்தை ஜூலை மாதமே திரைக்கு கொண்டு வரலாம் என பட குழு கலந்து ஆலோசித்து ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளது.

அதன்படி தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஜூலை மாதம் 14ஆம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Continue Reading
 

More in

Trending Now

To Top