நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக இருந்தவர் புரட்சி நாயகன் முரளி. இதயம் முரளி என்று இவருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. காரணம், இதயம் என்ற படத்தில் மிக அழுத்தமான நடிப்பை தந்திருப்பார் முரளி.

முரளி

காதல் நாயகனாக, ஆக்‌ஷன் நாயகனாக, பாசமான தம்பியாக பல படங்களில் அசத்தியிருப்பார் நடிகர் முரளி. குறிப்பாக சரத்குமாருக்கு தம்பியாக சமுத்திரம் படத்திலும், மம்முட்டியின் தம்பியாக ஆனந்தம் படத்திலும் முரளி நடிப்பு வேற லெவலில் இருக்கும்.

துவக்கத்தில் நிறைய சண்டை படங்களில், தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த முரளி அவ்வப்போது காமெடி படங்களிலும் நடித்து அசத்தினார். அதிலும் மிக குறிப்பாக வடிவேலுடன் அவர் சேர்ந்து காமெடியில் அசத்திய படம்தான் சுந்தரா டிராவல்ஸ். இந்த படத்தில் முரளி நடிப்பு அருமையாக இருக்கும்.

அதே போல் பொற்காலம் படத்தில், வாய் பேசாத தங்கைக்கு அண்ணனாக முரளி நடிப்பு தரமாக இருந்தது. அதேபோல் பார்த்திபனுடன் நடித்த வெற்றிக் கொடிக்கட்டு படத்திலும் முரளி நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

முரளி திடீர் மறைவு

மிக நல்ல நடிகராக பல படங்களில் சிறப்பாக நடித்து வந்த நடிகர் முரளி கடந்த 2010ம் ஆண்டில் உயிரிழந்தார். 50 வயது கூட நெருங்காத நிலையில் அவரது திடீர் மரணம் பலரையும் உலுக்கி விட்டது. அவர் மறைவுக்கு காரணம், அவரது அதிகமாக சிகரட் புகைக்கும் பழக்கம்தான் என்று அப்போது ஒரு தகவல் பரவியது.

இதையும் படியுங்கள்: நின்று போன KPY பாலா திருமணம்.. பெண் வீட்டார் போட்ட கண்டிஷன்.. மனமுடைந்த பாலா..

அதர்வா

கடந்த 1987ம் ஆண்டில் ஷோபா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் நடிகர் முரளி. முரளி – ஷோபா தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள்.

அதில் மூத்த மகன் அதர்வா, சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். டைரக்டர் பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

ஆகாஷ்

முரளியின் 2வது மகன் ஆகாஷ், புதுமுக நடிகராக விரைவில் திரையில் அறிமுகமாக இருக்கிறார். அவர் அண்ணன் அதர்வாவுக்கு திருமணம் செய்வதற்கு முன்பே, தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவி, சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

டாக்டர் காவ்யா

முரளியின் முதல் மகள் மூத்த மகள் பெயர் காவ்யா. அவர் டாக்டராக பணிபுரிகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். அவருக்கு 2011ம் ஆண்டில் திருமணமானது. பிள்ளைகள், கணவருடன் அவர் வாழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: மனைவியை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அனுப்பிவிட்டு.. இளம் நடிகையுடன் நெருப்பு இயக்குனர்.. நூதனமாக நடக்கும் Swapping..

அவர் அவ்வப்போது தனது குடும்பத்தினருடன், கணவர் மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!