அந்நியன் போல மாறிய நயன்தாரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு..?

அந்நியன் போல மாறிய நயன்தாரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு..?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. குறிப்பாக அவரது 75வது படமான அன்னபூரணி பெரிய அளவில் பிளாப் ஆனது.

நயன்தாரா

அதுமட்டுமின்றி அந்த படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சையான காட்சிகளால் நயன்தாராவுக்கு பயங்கர மன உளைச்சலும் ஏற்பட்டது. நெட்பிளிக்ஸில் வெளியான அன்னபூரணிக்கு எதிர்ப்பு வலுத்தது.

அதில் ராமர் சீதை குறித்து சர்ச்சையாக வசனம் இருந்ததால், வடமாநிலத்தில் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நெட்பிளிக்ஸ்சில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது.

மன்னிப்பு

இந்த விவகாரத்தில், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு நயன்தாரா அறிக்கை வௌியிட்டதும் செம வைரலானது. ஏனெனில் அப்படி பணிந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நயன்தாரா இறங்கி வர காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பிளாப் ஆனதுதான்.

இதையும் படியுங்கள்: மொழ மொழன்னு யம்மா.. யம்ம்மா.. மோசமான உடையில் ரித்து வர்மா.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

மண்ணாங்கட்டி

நயன்தாரா இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுவும் கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால், இந்த படத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்க்கிறார். அதே போல் ஜெயிலர் 2 படத்திலும் நயன்தாரா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

தாதா சாகிப் பால்கே

சமீபத்தில் ஜவான் படத்தில் நடித்ததற்காக, தனியார் அமைப்பு சார்பில் தாதா சாகிப் பால்கே சிறந்த நடிகை விருது நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது.

ஆனால் ஜவான் படத்துக்கு பிறகு இந்தியில் நயன்தாராவுக்கு இதுவரை வாய்ப்புகள் எதுவும் தேடி வராத நிலையில், இந்த விருது நயன்தாராவை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த நயன்தாரா, ஜவான் படத்துக்கு பிறகு நிறைய பதிவுகளை அவ்வப்போது வெளியிட ஆரம்பித்தார்.

அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களை, அவர் வெளியிடங்களுக்கு சென்றால் எடுக்கும் புகைப்படங்களை, அவரது உலகம், .உயிர் குழந்தைகளின் படங்களை அடிக்கடி தனது வலைபக்கத்தில் அப்டேட் செய்வது நயன்தாராவின் வழக்கமாக இருந்து வருகிறது.

மாறுபட்ட மூன்று நபர்தான்…

இந்நிலையில் தற்போது நயன்தாரா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், வேலையில் இருக்கும் நான், வெளியில் இருக்கும் நான், வீட்டில் இருக்கும் நான் என முற்றிலும் மாறுபட்ட மூன்று நபர்தான். நாங்கள் ஒரே மாதிரி இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன இது, அந்நியன் மாதிரி நயன்தாரா மாறிட்டாங்களோ என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: வரம்பு மீறிய தனுஷ்.. ரஜினி மகள்கள் குடுமிபிடி சண்டை.. இறுதியில் நடந்தது என்ன..? பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

ரசிகர்கள் குழப்பம்

வேலை செய்யும் போது, வெளியில் இருக்கும்போது, வீட்டில் இருக்கும் போது அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் செயல்படுவது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். இதில் என்ன பெரிய வித்யாசத்தை நயன்தாரா சொல்கிறார் என புரியவில்லையே என்றும் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.