Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” நரம்புத்தளர்ச்சி இருக்கா..!” – அப்ப கட்டாயம் இந்த டயட்ட நீங்க ஃபாலோ பண்ணுங்க..!!

இன்று நரம்புத்தளர்ச்சி பிரச்சனை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு காரணம் அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரிய குறைபாடு காரணமாக ஏற்படலாம்.

இந்த குறையை சரி செய்ய உங்கள் உணவுகளில் எந்த பொருட்களை சேர்த்தாலே போதும் நீங்கள் நரம்புத் தளர்ச்சியிலிருந்து எளிதில் விடுதலை ஆகலாம்.

நரம்புத் தளர்ச்சியை நீக்கும் பொருட்கள்

👍வாழைப்பூவை நீங்கள் வாரத்தில் ஒரு முறையோ, இருமுறையோ உங்கள் உணவில் பொறியலாகவோ வடையாகவோ செய்து உட் கொள்வதின் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய நரம்புத் தளர்ச்சியை போக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

👍மேலும் உங்கள் உணவுகளில் கீரை வகைகள் எது கிடைத்தாலும் அதை அதிகளவு சேர்த்துக் கொள்ளுங்கள். கீரைகளில் இருக்கும் தாதுப்புக்களும் விட்டமின்களும் உங்களது எந்த நரம்புத் தளர்ச்சியை எதிர்த்து போராடும்.

 👍எலும்பின் சத்துமானத்திற்கு மிகவும் சிறப்பாக கருதப்படும் பிரண்டையை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களது நரம்பு தளர்ச்சிக்கு பை பை சொல்லி விடலாம். அந்த அளவு பிரண்டை நரம்புத் தளர்ச்சியை எதிர்த்து போராடக்கூடிய குணம் கொண்டது.

--Advertisement--

👍அத்திப்பழத்தை தினமும் தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் உங்கள் நரம்புத் தளர்ச்சியை நீங்கள் வெகுவாக குறைத்து இயல்பான நிலையை அடையலாம். இதற்கு அத்திப்பழம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

 👍பேரிச்சம்பழத்தில் இருக்கும் இரும்பு சத்தானது உங்களுக்கு பக்க பலமாக இருந்து இந்த நரம்புத் தளர்ச்சியை எதிர்த்து போராட உதவும்.

👍முருங்கைக் கீரையில் அதிக அளவு தாது உப்புக்களும் இரும்பு சத்தும் இருப்பதால் கட்டாயம் தினமும் ஒரு கைப்பிடிகளாவது முருங்கைக் கீரையை நீங்கள் சாப்பிட்டு வருவதின் மூலம் நரம்பு தளர்ச்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறும் அளவிற்கு நரம்பு தளர்ச்சியை விரைவில் சரி செய்யும்.

👍 வாரத்தில் ஒரு முறை அல்லது இருமுறை நீங்கள் வெற்றிலை சாறு அல்லது வெற்றிலையை அப்படியே மென்று சாப்பிடுவதின் மூலம் உங்கள் நரம்புத் தளர்ச்சிக்கு நிவாரணம் கிடைக்கும்.

👍 ஆயுளை அதிகரித்து தரும் மலை நெல்லிக்காயை தினமும் நீங்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் நரம்பு நரம்புகள் பலமாகி நரம்பு தளர்ச்சி ஏற்படாது. மாதுளையையும் அதிகளவு நீங்கள் உட்கொள்வதின் மூலம் அல்லது மாதுளம் சாறை வாரத்தில் இருமுறை எடுத்துக் கொள்வதின் மூலம் நரம்புத் தளர்ச்சிக்கு தக்க பதிலடி நீங்கள் கொடுக்கலாம்.

 மேற்குரிய இந்த வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் கட்டாயம் உங்கள் நரம்புத் தளர்ச்சியில் இருந்து நீங்கள் விடுபட முடியும் என்பதை அறிந்து நம்பிக்கையோடு இதை ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top