Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“குழந்தைகளை வீட்டில தனியா விட்டுட்டு போறீங்களா..!” – ப்ளீஸ் இத மறக்காதீங்க..!!

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு செல்லக்கூடிய சூழ்நிலை என்று பெரும்பாலான வீடுகளில் உள்ளது. அவ்வாறு அவர்கள் தனியாக பிள்ளைகளை வீட்டில் விட்டு செல்லும்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவாக, விளக்கமாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

தனியாக விட்டு செல்லும் குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது

குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு செல்லும்போது அவசர உதவி எண்களை நீங்கள் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லலாம்.மேலும் அந்த அழைப்புகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது.

குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் போது எப்போது சாப்பிட வேண்டும்? எப்போது படிக்க வேண்டும்? தொலைக்காட்சியை எப்போது பார்க்க வேண்டும்? ஹோம் ஒர்க்கை முடித்து விட்டார்களா என்பது போன்ற செயல்களை செய்வதற்கு ஒரு டைம் டேபிளை போட்டு தருவது மிகவும் நல்லது.

அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய குறுந்தீனிகளை தக்க இடத்தில் பாதுகாப்பாக வைத்து அதனை எடுத்து சாப்பிட கூறலாம். மேலும் அந்தப் பொருட்கள் குழந்தைகள் சிரமம் இல்லாமல் எடுத்து சாப்பிடக்கூடிய உயரத்தில் வைப்பது மிகவும் நல்லது.

குழந்தைகளிடம் வெளியே யாராவது வந்தால் கதவை யாருக்காக திறக்க வேண்டும். யாருக்காக திறக்கக்கூடாது. அப்படி திறப்பதால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பதை பற்றி விளக்கமாக கூறி அவர்களை உஷார் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

--Advertisement--

நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பாதுகாப்பான நம்பிக்கை உரிய நபர்களிடம் மட்டும் நீங்கள் குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் அடிக்கடி போன் செய்து உங்கள் குழந்தைகளை நீங்கள் கண்காணிக்கலாம்.

வேலை சுமை காரணமாக உங்களால் வீட்டுக்கு சரியான நேரத்திற்கு வர முடியவில்லை என்றால் உங்கள் குழந்தைகளிடம் அதை கூறி அவர்களைப் பாதுகாப்பாக இருக்கும் படி கூற வேண்டும்.

உங்கள் வீட்டுக்கு திரும்பி வரும் நேரத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கித் தரலாம். இதன் மூலம் பல மணி நேரம் தனிமையில் இருந்த குழந்தைகள் உங்களை பார்க்கும் போது ஆறுதல் மற்றும் மகிழ்ச்சி ஏற்படும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top