Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

போன மாசம் கர்ப்பம்.. இந்த மாசம் ப்ரேக்-அப்..! – இது தான் காரணம்..? – பாவனி ரெட்டி தடாலடி..!

ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி, ராசாத்தி, பாசமலர் சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவானி ரெட்டி. விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசனில் இவர் பங்கேற்றார். சீரியல்களில் நடிப்பதற்கு முன்பே, தெலுங்கு நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஏதோ சில காரணங்களால், அவர் தற்கொலை செய்துகொண்டார்.

கணவரை இழந்த நிலையில், சீரியல்களில் நடித்த பாவனி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர் அமீர், பாவனியை துரத்தி துரத்தி டாவடித்தார். காதலிப்பதாகவும் பல விதங்களில், அவருக்கு உணர்த்தினார். ஆனால், பாவனி அவரது காதலை ஏற்றுக்கொள்ள தயங்கினார். மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு, பல பொது இடங்களில் அவர் ஒன்றாக சுற்றித்திரிவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு கட்டத்தில், திருமணம் செய்யாமலேயே, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பாவனி ரெட்டி ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் ஏன் இன்னும் உங்கள் ரகசிய திருமணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பாவனி ரெட்டி, ‘ கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக, தகவல் பரவியது. அடுத்து, காதலனை பிரிந்து விட்டதாக தகவல் வந்தது. இப்போது, ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது. அடுத்து, என்ன என்பதை ஆர்வமாக கேட்பதை போல பதிலடி தந்திருக்கிறார் பாவனி ரெட்டி. அது, இப்போது டிரெண்டிங் ஆக மாறி, வேகமாக பரவி வருகிறது.

--Advertisement--

Continue Reading
 

More in

Trending Now

To Top