“அடியே எச்ச..” – பூர்ணிமா ரவி செய்த கேவலமான செயல்.. விளாசும் பிக்பாஸ் ரசிகர்கள்..! – அட கொடுமைய..!

பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி தன்னுடைய பெயரை எப்படி எல்லாம் டேமேஜ் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய பெயர் வெளியில் டேமேஜ் ஆகி கொண்டு இருக்கிறது என்பதை இலை மறை காய் மறையாக அறிந்திருக்கிறார் பூர்ணிமா ரவி.

அதனை சரி செய்கிறேன் என்ற முயற்சியில் மென்மேலும் தன்னுடைய தவறை கூட்டிக் கொண்டே போகிறார். தவிர தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக ஏதேனும் வேலையை செய்கிறாரா என்றால்… இல்லை, என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு வேலையை செய்திருக்கிறார். இது ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. இன்றைய பாத்திரம் கழுவும் வேலையை சக போட்டியாளர் அர்ச்சனா செய்ய இருக்கிறார்.

எனவே அவருக்கு அதிக வேலைப்பளு கொடுக்கும் விதமாக ஒரு பாத்திரத்தில் உள்ள சாப்பாட்டை இரண்டு மூன்று பாத்திரங்களில் மாற்றி மாற்றி கொட்டி அசுத்தம் செய்து கொண்டிருக்கிறார் பூர்ணிமா ரவி.

இது குறித்து சக போட்டியாளர்களிடம் தான் செய்யும் இந்த உன்னதமான வேலை குறித்து விவரிக்கவும் செய்கிறார். இன்று அர்ச்சனா பாத்திரம் கழுவுகிறார். நிறைய பாத்திரங்கள் கழுவட்டும்.. என்று தான் இப்படி செய்து கொண்டிருக்கிறேன் என கூறுகிறார் பூர்ணிமா ரவி. இதனை பார்த்த ஜோவிகா.. ரொம்ப மோசம்ங்க நீங்க.. என்று கூறுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படுமோசமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மட்டுமில்லாமல் தொடர்ந்து மாயாவிடம் உரையாடும் பூர்ணிமா என்னுடைய கேரக்டரே இதுதான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

நான் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் எதுவும் திட்டம் வகுத்து செயல்படவில்லை. நான் நானாகத்தான் இருக்கிறேன். என்னிடம் எதை மாற்றுவது என்று எனக்கு தெரியவில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

வேண்டுமென்றே பாத்திரங்களை அசுத்தப்படுத்திய விகாரம் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவன் கூட எப்படி அதை பண்ணியோ.. ரச்சிதா மகாலட்சுமிக்கு ஹின்ட் கொடுத்த பிக்பாஸ் நடிகை..!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், …