இந்த வார Mid week எவிக்ஷன் இவரு தான்..!

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி உள்ளது. இது வரை நடந்த 6 சீசன்களை விட இந்த சீசன் 7-ல் பல வித்தியாசமான போட்டிகளை போட்டியாளர்கள் சந்தித்திருக்கிறார்கள். heஇதில் இந்த வார Mid week எவிக்ஷன் பற்றி பரபரப்பான விஷயங்கள் லீக் ஆகி உள்ளது.

மேலும் வழக்கம் போல இந்த பிக் பாஸ் சீசன் 7 உலக நாயகன் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த சூழ்நிலையில் இந்த சீசனில் முதல் முறையாக பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்ற இரண்டு வீடுகள் இடம் பெற்ற நிலையில் இரண்டாவது வீடு பார்ப்பதற்கு சிறைச்சாலையைப் போல இருப்பதாகவும், பல விதிகளோடு இந்த வீடு இயங்கும் என்ற விஷயங்கள் வெளி வந்து விட்டது.

பிக் பாஸ் சீசன் 7 ஆனது சுமார் 80 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்பது அவிழ்க்க முடியாத மர்மமாக உள்ளது. இதனை அடுத்து இந்த வாரம் எலிமினேஷன் யார் என்ற விவரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வந்த வண்ணம் உள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆறு பேர் இருக்கிறார்கள். இதில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் யார் என்பது உறுதியாகும் என்பதால் அதிகளவு மக்களின் ஆதரவு அர்ச்சனாவிற்கு உள்ளது என சொல்லப்படுகிறது. எனவே அடுத்த டைட்டில் வின்னர் அர்ச்சனா என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.

--Advertisement--

எனவே ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் இறுதி சுற்றிற்கு நான்கு போட்டியாளர்கள் மட்டும் தான் வருவார்கள். எனவே இரண்டு பேரை இந்த வாரத்தின் இடையிலேயே மிட் வீக் எவிக்ஷன் இருக்கும் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சிறப்பாக இத்தனை நாட்கள் விளையாடிய போட்டியாளர் விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டை விட்டு மிட் வீக் எவிக்ஷன் மூலம் வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் கசிந்து வருகிறது. இதனை அடுத்து இவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.

எனினும் வேறு யாராவது வெளியேற மாட்டார்களா? இவர் அந்த வீட்டிலேயே இருந்து விளையாட மாட்டாரா? என்பது போல இவரது ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.