தோண்டப்பட்ட பழைய மேட்டர்... யார் அந்த பிரபல `நடிகர்'.. பெயர்... கூவத்தூர்.. புதிய ட்விஸ்ட்

தோண்டப்பட்ட பழைய மேட்டர்… யார் அந்த பிரபல `நடிகர்’.. பெயர்… கூவத்தூர்.. புதிய ட்விஸ்ட்

எப்போதோ நடந்த ஒரு விவகாரம் திடீரென விஸ்வரூபம் எடுத்தது போல, 2017ம் ஆண்டில் நடந்த அந்த சம்பவம், இப்போது அந்த பிரபல நடிகருக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2007ம் ஆண்டில் மறைவுக்கு பின், அதிமுக வில் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகள் பிரிந்தது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள், மற்ற அணிக்கு தாவுவதை தடுக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது.

கூவத்தூர் நட்சத்திர விடுதி

அதன்படி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருந்த எம்எல்ஏக்கள் அனைவரும் கடந்த 2017ம் ஆண்டில் கூவத்தூரில் இருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு 11 நாட்கள் அவர்கள் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்த எம்எல்ஏக்கள் அனைவருக்கும் எல்லாவிதமான தேவைகளும் நிறைவேற்றப்பட்டது. மதுபான விருந்து, அசைவ விருந்து, பாட்டு மற்றும் கூத்து என அதிமுக எம்எல்ஏக்கள் கொண்டாட்டம் போட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அதை எல்லாமே காலப்போக்கில் மறந்துவிட்ட நிலையில், சமீபத்தில் ஒரு புது குண்டு வெடித்தது.

அதிமுக முன்னாள் நிர்வாகி

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜூ என்பவர் பத்திரிகையாளர் சந்திப்பில், 2017ம் ஆண்டில் நடந்த சில விஷயங்களை அம்பலப்படுத்தினார். அப்போது நடிகர் கருணாஸ் குறித்தும், நடிகை திரிஷா குறித்தும் சில அவதூறான விஷயங்களை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: அந்நியன் போல மாறிய நயன்தாரா.. குழப்பத்தில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு..?

இதில் குறிப்பிட்ட நடிகை ஒருவர் அந்த நட்சத்திர விடுதிக்கு வரவழைக்கப்பட்டதாகவும், அதற்கு நடிகர் ஒருவர் ஏற்பாடு செய்ததாகவும் இதற்காக ரூ 25 லட்சம் தரப்பட்டதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்திருந்தார்.

அந்த நடிகை மட்டுமின்றி இன்னும் சில நடிகைகள் அங்கு வந்ததாகவும் அவர் பெயரை குறிப்பிடாமல் சொன்னார்.

கண்டனம்

இது சமூக வலைதளங்களில் பயங்கரமான பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி, நடன இயக்குநர் பிருந்தா, நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

நடிகர் கருணாஸ்

இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக அப்போதைய அதிமுக எம்எல்ஏவாக இருந்த நடிகர் கருணாஸ் பெயர்தான், மிகவும் டேமேஜ் ஆகியுள்ளது.

நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கருணாஸ். பின் படிப்படியாக நல்ல காமெடி ரோல்களில் நடித்து, ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.

ஹீரோவாக…

பாபா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், வில்லன் போன்ற படங்களில் காமெடியாக நடித்தவர், அதன்பின் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இதையும் படியுங்கள்: மொழ மொழன்னு யம்மா.. யம்ம்மா.. மோசமான உடையில் ரித்து வர்மா.. பத்தி எரியுது இண்டர்நெட்..!

இதற்கிடையே கூவத்தூர் விவகாரத்தில் தன்னுடைய பெயர் இப்படி சிக்கி சின்னாபின்னமாகும் என அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் கருணாஸ்.

பிரபல நடிகரின் பெயராக…

பல ஆண்டுகளுக்கு பின் தோண்டப்பட்ட பழைய மேட்டரில் பிரபல நடிகரின் பெயராக கூவத்தூரில் புதிய ட்விஸ்ட் ஆக கருணாஸ் பெயர் சிக்கியிருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.