Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தை போக்கணுமா..!” – அப்ப மீன்-க்கு பொரிய போடுங்க..!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற வார்த்தைக்கு ஏற்ப மானிடப்பிறவியை நாம் எடுத்திருந்தாலும் நம் ஊழ்வினைக்கு ஏற்ப நமக்கு பலாபலன்கள் அமைகிறது.

 இதில் நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை வேரோடு கலையவும் இந்த ஜென்மத்தில் நீங்கள் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்கின்ற பாவத்தை போக்கக்கூடிய எளிய பரிகாரம் என்னவென்று தெரியுமா?

 அந்த பரிகாரத்தை நீங்கள் மிக எளிதில் செய்வதின் மூலம் நீங்கள் செய்த பாவங்களில் இருந்து விடுதலையாக முடியும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது  என்ன என்று இந்த கட்டுரையை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாகவே கோயிலுக்கு செல்லும்போது அந்த கோயிலை ஒட்டி குளம் இருக்கும். இந்த குளத்தில் மீன்கள் நிறைய இருக்கும் இந்த மீன்களுக்கு பொரிகளை உணவாக வாங்கி போடும் பழக்கத்தை நமது முன்னோர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

 ஆலயம் சென்றதும் கை, கால் கழுவி விட்டு பிறகு வாங்கி மீன்களுக்கு பொரியை தூவ வேண்டும். இந்த மீன்கள் எவ்வளவு உணவாக அந்த பொரியை எடுத்துக் கொள்கிறதோ அதன் மூலம் உங்கள் பாவமும் விளக்கும்.

--Advertisement--

 இந்த மீன்கள் உங்கள் பொரியை உண்ணுவதன் மூலம் சின்னச் சின்ன தோஷங்கள் நீங்கி விடுவது, பாவங்களைப் போக்கக்கூடிய சக்தி இந்த மீன்களுக்கு உள்ளதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

 அதுபோலவே புறாக்களுக்கு உணவளிப்பதின் மூலம் பூர்வ ஜென்ம சாபம் நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை, தானியங்களை புறாக்களுக்கு இரையாக கொடுப்பதின் மூலம் நிறைய புண்ணியங்கள் சேரும்.

 எனவே வீடு தேடி வரும் புறாக்களுக்கு உணவளிக்க நீங்கள் மறக்க வேண்டாம். மேலும் நீங்கள் தர்மம் செய்வதற்கு நல்ல நாளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எப்போது நினைத்தாலும் அதை செய்வதின் மூலம் உங்களுடைய பாவங்கள் குறையும்.

 சிவபெருமானை நினைத்து வில்வம் சாத்தி வழிபடுவதன் மூலம் ஏழேழு ஜென்மத்தில் நீங்கள் செய்திருக்க கூடிய பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். அத்தோடு வில்வாசகம் பாராயணம் செய்து சிவனை தரிசித்தாலே உங்களுக்கு அளப்பரிய  பரிகாரமாக இது விளங்கும்.

 எனவே மேற்கூறிய இந்த வழிகளை நீங்கள் பின்பற்றி உங்களது பாவங்களை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top