Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

BB போட்டியாளருக்கு செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிய ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி சக பிக் பாஸ் போட்டியாளர் ஷிவின் கணேசன் என்பவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி ரசிகர் மத்தியில் இன்னும் பிரபலமானார் உடன் இவருடன் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவின் கணேசன் என்பவரும் இவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தார்கள்.

இருவரும் நெருக்கமாக இருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருந்து வந்தனர். இந்த நெருக்கம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது ஷிவின் கணேசனுக்கு கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சீரடி சாய்பாபா கோவிலுக்கு நான் உன்னோடு வருகிறேன் என்று கூறியிருந்தார் மற்றும் சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

--Advertisement--

இந்நிலையில், தற்போது இந்த சத்தியத்தை நிறைவேற்றும் மூலமாக ஷிவின் கணேசனுடன் சீரடி சாய்பாபா கோவிலுக்கு விஜயம் செய்து தரிசனத்தை செய்து விட்டு வந்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆகிய சிலவற்ற இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரட்சிதா மகாலட்சுமி.

கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடைய காதல் கணவர் தினேஷ் என்பவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது இவருடைய இரண்டாவது திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரும் ரச்சிதா மகாலட்சுமியின் குடும்ப நண்பருமான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

தொடர்ந்து ரச்சிதா மகாலட்சுமியின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கை என்றாலும் கூட தற்போது ரச்சிதா மகாலட்சுமி எந்த ஒரு மறுப்பு அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்குமோ..? என்ற ஒரு கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் வேலை செய்திருக்கிறது. இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Continue Reading
 

More in

Trending Now

To Top