ஜீன்ஸ் பேண்டில் ராஜலட்சுமி.. ரோட்டில் அநாகரீக சீண்டல்.. அமெரிக்காவில் அரங்கேறிய அசிங்கம்…

ஜீன்ஸ் பேண்டில் ராஜலட்சுமி… ரோட்டில் அநாகரீக சீண்டல்.. அமெரிக்காவில் அரங்கேறிய அசிங்கம்…

விஜய் தொலைக்காட்சி தங்களை நாடி வரும் பல்வேறு திறமைசாலிகளுக்கு வாய்ப்பளித்து வாழ வைத்து வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய மக்களிசை ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி சூப்பர் சிங்கர் – 6வது போட்டியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்கள்.

அவர்களின் கிராமிய பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகினார்கள். அந்த நிகழ்ச்சியில் செந்தில்கணேசன் முதல் இடத்தை வென்று, ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார். இதற்கிடையில் செந்தில் கணேஷ் அறிமுக இயக்குனர் செல்ல. தங்கையா இயக்கத்தில் 2014ல் வெளியான திருடு போகாத மனசு எனும் தமிழ் திரைப்படத்தில், இவர் சாய் மற்றும் ராஜலக்ஷ்மியுடன் கதாநாயகனாக பாடி நடித்துள்ளார்.

rajalakhsmi senthil ganesh

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் மளமளவென குவியத்துவங்கியது. கணவன் மனைவி இருவருமாக சேர்ந்தே பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடி வருகிறார்கள். சினிமாவில் சின்ன மச்சான் என்ற பாடலை பாடி பிரபலமான இவர் மேலும், பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.அவரது மனைவி ராஜலட்சுமியும் பாடல்கள் பாடி வருகிறார்.

பாடகி ராஜலக்ஷ்மியும் லைசென்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் இயக்கிவுள்ளார். இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக ராஜலட்சுமி நடித்துள்ளார். தனது பாதுகாப்பிற்காக ஆசிரியை துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கிறார். அதன் பிற்கு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

இப்படி திரைப்படங்களில் நடிப்பது, திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடுவதையும் தாண்டி வெளிநாடுகளுக்கு கச்சேரிக்கு செல்லும் கிராமிய இசைக்கலைஞர் செந்தில் கணேஷின் மனைவியும் பிரபல படகியுமான ராஜலட்சுமி சமீபத்தில் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று இருந்த பொழுது அங்கே ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்: மிரட்டலுக்கு பயந்த இளம் நடிகை.. விடிய விடிய வேட்டையாடிய உயர் அதிகாரி.. பிரபலம் உடைத்த ரகசியம்!

இதனை பார்த்து ரசிகர்கள் உனக்கெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் கேக்குதா என்பது ஆரம்பித்து அச்சு விரட்ட முடியாத அளவுக்கு மோசமான கருத்துக்களை கொண்டு ராஜலட்சுமி உருவ கேலி செய்யும் விதமாகவும் அவருடைய தன்னம்பிக்கை உடைக்கும் விதமாகவும் மோசமான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

rajalakshmi

இதனை பார்த்த ராஜலட்சுமி நான் சிறுவயதிலிருந்து கிராமத்தில் வாழ்ந்தவர்கள். நாட்டுப்புற பாடலை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன் நாட்டுப்புறப் பாடலை தான் எனக்கு தாலாட்டு பாடலாகவே பாடினார்கள் ஆனால், நாட்டுப்புறத்திலிருந்து வந்த ஒரு பெண் ஒரு ஊருக்கு செல்லும் பொழுது அந்த ஊருக்கு ஏற்ற உடையை அணிந்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் பேசுவது என்ன நியாயம் என கேள்வி எழுப்பி இருக்கிறார் ராஜலட்சுமி இந்த பதில் குறித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்

   

--Advertisement--