Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ராமராஜன் குடும்பத்தில் நேர்ந்த மரணம்..! உச்ச கட்ட சோகம்..! இப்படி ஆகிடுச்சே..!

தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. தனது திறமையால், நடிப்பால், மக்களை கவர்ந்து அவர்கள் மனதில் இடம்பெற்று விடும் முகராசி சில நடிகர்களுக்கு தானாக அமைந்து விடுகிறது.

ராமராஜன்

அவர்களில்தான் ஒருவர்தான் கிராமத்து நாயகன் நடிகர் ராமராஜன். சில நடிகர்களை போல அழகோ, கவர்ச்சியான முகத் தோற்றமோ, கம்பீரமான உடற்கட்டோ எதுவுமே இல்லாமல், ஒரு சராசரி மனிதராக அடிக்கடி நம்முடன் பழகிய ஒரு பரிச்சயமான தோற்றத்தில் இருப்பவர்தான் ராமராஜன்.

இப்படி நடிகருக்கு உரிய எந்த அம்சங்களுமே இல்லாமல், அந்த மைனஸ் பாயிண்டுகளாலேயே அதிக கவனத்தை ஈர்த்து, யதார்த்த கலைஞனாக மக்களின் மனங்களை தொட்டு வெற்றி பெற்ற பெருமை ராமராஜனையே சேரும்.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு மத்தியில், கிராமத்து நாயகனாக சினிமாவுக்குள் வந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் நாயகன் ராமராஜன்.

ராமராஜன் நடித்த படங்கள் என்றாலே, அது கிராமப்புற கதைகளை கொண்ட படங்களாக தான் இருக்கும். அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும், சண்டைக் காட்சிகளும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

--Advertisement--

கரகாட்டக்காரன்

அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது கரகாட்டக்காரன். கங்கை அமரன் டைரக்சன் செய்த இந்த படம் 1989 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.

கிராமத்து வாசனை மிக்க இந்த படம், கரகாட்டக்க கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியது. ராமராஜன் – கனகா காதல் காட்சிகள், கவுண்டமணி செந்தில் கோவை சரளா காமெடி காட்சிகள், படத்தின் பாடல்கள் படத்தை வேற லெவலில் கொண்டு போனது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் 365 நாட்களுக்கு மேல் பல தியேட்டர்களில் ஓடியது. பல தியேட்டர்களில் 100, 200, 250 நாட்கள் ஓடியது.

இந்த சமயத்தில் ரஜினி, கமலுக்கு இணையான மிகப்பெரிய ஹீரோவாக வசூலில் ராமராஜன் சாதனை படைத்தார். சூப்பர் ஹீரோவாக ரசிகர்களால் பார்க்கப்பட்டார் என்பதுதான் மிகப்பெரிய உண்மை .

நளினியை காதலித்து திருமணம்

அப்போது தமிழில் பிரபல நடிகையாக இருந்த நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 13 ஆண்டுகளில் அவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இடையில் அதிமுக ராஜ்யபா எம்பி ஆக இருந்த ராமராஜன், ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து பின்பு குணமடைந்தார். அதன் பிறகு பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ராமராஜன், இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

சாமானியன் படம்

சாமானியன் என்ற படத்தில், இப்போது ராமராஜன் நடித்திருக்கிறார். ராகேஷ் என்பவர் இயக்கிய அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அக்கா மறைவு

ராமராஜன் மதுரையை சேர்ந்தவர். அங்குள்ள மேலூரில்தான் அவரது உறவினர்கள் இருக்கின்றனர். குறிப்பாக ராமராஜனின் உடன் பிறந்தவர்கள், அம்மா, அப்பா வழி சொந்தங்களும் அங்குதான் இருக்கின்றனர். இந்த சூழலில், ராமராஜன் குடும்பத்தில் ஒரு துயரம் நேர்ந்திருக்கிறது.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த ராமராஜனின் சொந்த அக்கா புஷ்பவதி என்பவர், தனது 75வது வயதில் உயிரிழந்து விட்டார். அவரது மறைவால் ராமராஜன் மிகவும் சோகத்தில் இருந்து வருகிறார்.

இப்படி ஆகிடுச்சே…

ராமராஜன் குடும்பத்தில் நேர்ந்த மரணம், சொந்த அக்காவை இழந்த அவரது உச்சகட்ட சோகத்தை அறிந்து, இப்படி ஆகிடுச்சே என்று அவரது ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top