“கோடை காலத்திலும் சளி தொல்லையா?” – இப்படி சரி செய்து பாருங்க..!

பொதுவாகவே அனைவருக்கும் குளிர் காலத்தில் தான் சளி பிடிக்கும். இதற்கு காரணம் சீதோசன நிலையில் அதிகரிக்க இருக்கும் ஈரப்பதம் தான். எனினும் சில பேருக்கு இந்தக் கோடையில் சளி பிடித்தால் எப்படி இருக்கும். சளி பிடித்து சிரமப்படுபவர்கள் இந்த சளியை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கோடையில் சளி பிடிப்பதற்கு காரணம் வியர்வை நீர் நமது உடம்புக்குள் இறங்குவதாலும், தலையில் இறங்குவதாலும், தான் சளி ஏற்படுகிறது. எனவே அப்படி வியர்வை நீர் ஏற்பட்டால் அதை உடனே துடைத்து விடுதல் நல்லது.

summer cold

அப்படி இல்லை எனில் உங்களுக்கு கட்டாயம் சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதை தடுக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

கோடையில் ஏற்படும் சளி தொல்லையிலிருந்து விடுதலை பெற ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் அளவு ஆப்பிள் சிலர் வினிகரை சேர்த்து கலந்து நீங்கள் குடித்து வரவேண்டும். இப்படி நீங்கள் குடிப்பதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சளி பிரச்சனைகளில் இருந்து உங்களால் நிவாரணம் பெற முடியும்.

மேலும் கொத்தமல்லி, வெந்தயம், சீரகம் இவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை நீங்கள் ஒரு கப் தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதின் மூலம் உங்களுக்கு கோடையில் ஏற்படும் சளி தொல்லை ஏற்படாது.

--Advertisement--

summer cold

மேலும் வைட்டமின் பி நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற  பழங்களை சாப்பிடுவதின் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சளி தொல்லையிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே நீர் சத்து இருக்கும் இந்த பழத்தை அடிக்கடி நீங்கள் சாப்பிடுங்கள்.

இஞ்சியை தட்டி அதை கொதிக்கின்ற நீரில் போட்டு சிறிதளவு தேயிலையும் சேர்த்து டீ வைத்து குடிப்பதின் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சளித்தொல்லை ஏற்படாது. மேலும் உங்களுக்கு  சுறுசுறுப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

summer cold

நீங்கள் எழுந்திருக்கும் போது ஒரு டம்ளர் தண்ணீரில், அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன் கல் உப்பு கலந்து உங்கள் வாய்களை நன்கு கொப்பளித்து வந்தால் வாயில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நீங்கி உங்களுக்கு சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்க வழி செய்யும்.

இரவு உறங்க போவதற்கு முன்பு நீங்கள் நொச்சி இலை, நீலகிரி தைலம் போன்றவற்றை கொதிக்கின்ற நீரில் போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படக்கூடிய கோடைகால சளியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

summer cold

மேலும் இந்தக் கோடையில் சளியை தவிர்க்க நீங்கள் பூண்டு கசாயம் வைத்துக் கொள்ளலாம். இதற்காக நான்கு பல் பூண்டை நன்கு தட்டி, எலுமிச்சை சாறு கலந்து தேனையும் சேர்த்து சுடுநீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக மாற்றி குடித்தால் போதுமானது.

சிறிதளவு தேனோடு எலுமிச்சை சாறு கலந்து சிறப்பு போல செய்து தினமும் காலை, மதியம், இரவு என பருகி வந்தால் தொண்டை எரிச்சல் நீங்குவதோடு கோடை சளி பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.