Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“டல்லான பேஸை பிரைட்டா மாற்றும் உப்பு..!” – இப்படி யூஸ் பண்ணா 100% ரிசல்ட்..!!

 உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இந்த உப்பு சமையல் அறையில் தன்னுடைய ஆதிக்கத்தை அதிகளவு செலுத்தி வருகிறது. இந்த உப்பின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

 மேலும் இந்த சமையல் உப்பை பயன்படுத்தி நீங்கள் உங்கள் முக அழகை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும். அதுவும் உங்கள் சரும அழகை கூடுதல் பளபளப்பாக மாற்ற இந்த உப்பு பயன்படுகிறது.

 உப்பில் இருக்கக்கூடிய மக்னீசியம், கால்சியம் சோடியம், பொட்டாசியம் மூலம் உங்கள் சரும ஜொலி ஜொலிப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் கடல் உப்பை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மேனியில் இருக்கும் மாசுகளை நீக்கி பக்காவாக ஜொலிப்பதற்கான டிப்ஸை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 உப்பினைக் கொண்டு தயாரிக்கப்படும் பேசியல் டோனர்

 ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு ஸ்பூன் அளவு உப்பினை போட்டு  அது கரையக்கூடிய அளவு வெதுவெதுப்பான நீரினை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

 இப்போது உப்பும் நீரும் நன்கு கலந்த பிறகு அந்த ஸ்பிரேயரை கொண்டு உங்கள் முகம் மற்றும் உடலில் சருமம் இருக்கும் பகுதிகள் முழுவதும் தெளித்து விடுங்கள்.

--Advertisement--

 இதனை அடுத்து நீங்கள் தொடர்ந்து வாரம் ஒரு முறை இதுபோல அடித்து வர வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய துளைகளை ஆழமாக இந்த டோனர் சுத்தம் செய்வதோடு உப்பு எண்ணெய் உற்பத்தியை சமன் செய்து விடுகிறது.

 இதனால் எண்ணெய் வழியக்கூடிய சருமம் இருந்தால் அது நார்மல் சருமத்திற்கு வந்துவிடும். மேலும் வெடிப்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துவதின் காரணமாக முகத்தில் முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இதனை குறைந்த பட்சம் ஒரு மாதம்  தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால் நல்ல பலனை பெற முடியும். மேலும் பைசா செலவில்லாமல் நீங்கள் இந்த பேசியல் டோனரை உங்கள் வீட்டிலேயே செய்து பயன்படுத்தி எண்ணற்ற நன்மைகளைத் பெறலாம். டல்லான பேஸை இது ப்ரைட்டாக சில நாட்களிலேயே மாற்றி விடுவதால் நீங்கள் இன்றே ட்ரை செய்து பாருங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top