கொடைக்கானலில் இளம் நடிகருடன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன்.. சரண்யா பொன்வண்ணன் கதறல்..

கொடைக்கானலில் இளம் நடிகருடன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன்.. சரண்யா பொன்வண்ணன் கதறல்..

நடிகை சரண்யா, தமிழில் நாயகன் படம் மூலம், 1987ம் ஆண்டில் கமல்ஹாசனுக்கு கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படமே மணிரத்னம் இயக்கிய படம் என்பது, அவருக்கு கிடைத்த மற்றொரு சிறப்பான வாய்ப்பு.

சரண்யா

தொடர்ந்து பல தமிழ் படங்களில் சரண்யா நடித்தார். பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தில் நடித்து, சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சரண்யாவை, அந்த படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த பொன்வண்ணன் திருமணம் செய்துக்கொண்டார்.

அவரிடம் தன் விருப்பத்தை சொல்ல, பொன்வண்ணன் கையாண்ட ஒரு விதம், இன்றளவும் பலரால் ரசித்து கேட்கப்படுகிறது. அதாவது, பொன்வண்ணன் சரண்யாவை போனில் அழைத்து, உங்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சரண்யா, எத்தனை நாட்கள் வேண்டும் என்று கேட்டதற்கு, 60,70 ஆண்டுகள் வேண்டும் என்று கேட்டு, சரண்யாவை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

அதாவது சரண்யாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதை பொன்வண்ணன் சிம்பாலிக் ஆக சொல்லி, பின் சரண்யா வீட்டில் பாரதிராஜா பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

அம்மா கேரக்டரில்…

தமிழில் ஒரு கட்டத்துக்கு பிறகு அம்மா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த சரண்யா பொன்வண்ணன் நிறைய படங்களில் அம்மா கேரக்டரில் பிஸியாக நடித்துக்கொண்டே இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  41 நாட்கள் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த திரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன்..

அஜீத்குமார், உதயநிதி, விமல், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பரத் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக தொடர்ந்து நடித்து வருகிறார். அதிலும் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதி அம்மா கேரக்டரில் மிக அழுத்தமான நடிப்பை தந்தவர் சரண்யா பொன்வண்ணன்.

 

சாரதா டீச்சர்

இந்நிலையில், இயக்குநர் அமீர் இயக்கத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்த படம் ராம். இதில் நடிகர் ஜீவாவுக்கு அம்மாவாக சாரதா டீச்சர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சரண்யா கூறியதாவது,

ராம் படத்தில் என்னையும் ஜீவாவையும் தவிர ஆர்ட்டிஸ்ட் யாருமே இல்லை. ஜீவா அப்போ நிறைய படங்கள் பண்ணாமல், கொஞ்சம் ப்ரீயா இருந்த டைம். அதே மாதிரி நானும் ஈ ஓட்டீட்டு இருந்த டைம்தான். அந்த ஒரு படம்தான் பண்ணீட்டு இருந்தேன்.

அதனால் அமீர் என்ன பண்ணினாரு, கொடைக்கானலில் கொண்டு போய் ஒரு ஹவுஸ் அரஸ்ட் மாதிரி எங்களை போட்டுட்டார். நாங்க 20 நாள் எல்லாம் அங்கதான் உட்கார்ந்துட்டு இருப்போம்.

ஒரே ஜாலியா இருக்கும்

பர்ஸ்ட் நாளிலேயே ஆராரிராரோ பாட்டு எடுத்தார். அப்பப்போ ஒரு ஸ்மால் சீன் கட் சீன் எடுப்பார். அப்புறம் விட்டுடுவார். அதனால் எதுக்கு வந்தோம் என்பதே மறந்து போகும். நாங்க எங்காவது உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருப்போம். பாப்கார்ன் வாங்கி தின்னுட்டு இருப்போம்.

இதையும் படியுங்கள்:  எனக்கு இந்த பழக்கம் இருக்கு.. கல்யாணம் தேவையில்ல.. வெளிப்படையாக கூறிய ஆண்ட்ரியா.. விளாசும் ரசிகர்கள்..

ஷூட்டிங் மாதிரியே இல்லாமல், ஒரே ஜாலியா இருக்கும். கூலா இருப்போம். டென்சனே கிடையாது. அமீர் வருவார், ஒரு ஷாட் எடுப்பார். அப்புறம் போயிடுவார். நாங்க இப்படி போயிடுவோம். அப்படித்தான் இருந்தது.

அவ்வளவு கதை பேசியிருக்கோம்

நானும் ஜீவாவும் அவ்வளவு கதை பேசியிருக்கோம். என் லைப்ல நான் யார் கிட்டேயும் அவ்வளவு கதை பேசியதே இல்லை. அங்கிருக்கற மலை மேல உட்கார்ந்துட்டு ஜீவா பிறந்தது முதல் அப்ப வரை என எண்ட் வரை கதை சொல்லிட்டு இருப்பார்.

அதே மாதிரி நானும் பொறந்தது முதல் இப்ப வரை எப்படீன்னு எல்லா கதையும் அவர்கிட்ட சொல்றது, அப்படி நாங்க ரெண்டு பேரும் பல வருஷமா பிரண்ட்ஸா இருக்கற மாதிரி அப்படி பேசியிருக்கோம், என்று சரண்யா பொன்வண்ணன் கூறியிருக்கிறார்.

ராம் படத்துக்காக, கொடைக்கானலில் இளம் நடிகர் ஜீவாவுடன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன் என்று சரண்யா பொன்வண்ணன் கூறியிருக்கிறார்.