நடிகையர் திலகம் சாவித்திரியின் அந்தரங்கம்.. பலரும் அறியாத கொடுமையான உண்மைகள்..!

நடிகையர் திலகம் சாவித்திரியின் அந்தரங்கம்.. பலரும் அறியாத கொடுமையான உண்மைகள்..!

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என்றால் சிவாஜி என்போம். நடிகையர் திலகம் என்றால் சாவித்திரி என்று அனைவரும் அழகாக எளிதில் சொல்லி விடுவார்கள். அப்படிப்பட்ட நடிகையர் திலகம் சாவித்திரியின் அந்தரங்க வாழ்க்கை பல கொடுமையான உண்மைகளை கொண்டுள்ளது.

நடிகை சாவித்திரியின் அந்தரங்கம் பற்றி பலரும் அறியாத பல விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அப்போது உங்களுக்கு எளிதாக புரியும் சாவித்திரி பட்ட வேதனைகள் என்னென்ன என்பது.


நடிகையர் திலகம் சாவித்திரி..

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சாவித்திரி சுமார் 318 படங்களுக்கும் மேல் நடித்திருக்கலாம் என்று சொல்லலாம்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றியதை அடுத்து இசை மற்றும் நடனத்தை கற்றுக்கொண்டு அனைவரையும் கலக்க கூடிய வகையில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: தன்னை விட வயசு குறைந்த ஹீரோ.. ஆனால்.. மீரா கிருஷ்ணா செஞ்ச வேலையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

--Advertisement--

இவர் 1951-இல் திரை உலக பயணத்தை ஆரம்பித்தார். கல்யாணம் பண்ணிப்பார் என்ற திரைப்படத்தில் 1952-ல் நடிக்க ஆரம்பித்த இவர் தேவதாஸ், பெண்ணின் பெருமை, வணங்காமுடி, காத்தவராயன், களத்தூர் கண்ணம்மா, புதிய பாதை, பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, நவராத்திரி, ஆயிரம் ரூபாய், திருவிளையாடல், அண்ணாவின் ஆசை, தட்டுங்கள் திறக்கப்படும், ஜக்கம்மா போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.


ஜெமினிகணேசனும் முதன் முதலில் ஜோடியாக நடித்த படம் மனம் போல் மாங்கல்யம் இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் தமிழை மிகவும் நன்றாக உச்சரித்து பேசக்கூடிய தன்மை கொண்டவர்.

பலருக்கும் தெரியாத அந்தரங்கம்..

மிஸியம்மா படத்தில் ஜெமினி கணேசன் உடன் நடிகையர் திலகம் ஜோடியாக நடித்த எனினும் இவரது கதாபாத்திரத்தை பானுமதி செய்வதாக இருந்தது. இந்தப் படம் காதல் திரைப்படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

நடிகைகளுக்கு எப்போதும் சினிமா துறையில் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தனது மாமன் உறவு கொண்ட சவுத்ரி என்பவரை தனக்கு மேனேஜராக சாவித்திரி நியமித்துக் கொண்டார்.

ஒரு சில ஆண்டுகளிலேயே சாவித்திரியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சவுத்ரி அத்துமீறிய கட்டுப்பாட்டுகளை சாவித்திரியின் மீது திணித்தார்.


மாமன் சவுத்ரியோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடைத்து சவுத்ரியை விட்டு விலகி ஜெமினி கணேசன் வீட்டுக்கு சென்று அடைக்கலம் கேட்ட சாவித்திரிக்கு ஜெமினி கணேசனின் முதல் மனைவி அடைக்கலம் அளித்தார்.

அடுத்து ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரியை தனியாக ஒரு வாடகை வீட்டில் வைத்தார். அன்று முதல் அவர்களுக்குள் காதல் அரும்பி அந்த இடத்திலேயே வாழ துவங்கி விட்டார்கள். இதனை அடுத்து ஜெமினி கணேசன் சாவித்திரியை தனது இரண்டாவது மனைவியாக ஆக்கிக் கொண்டார்.

வெளி வந்த உண்மைகள்..

நடிகைகளிலேயே வெளிநாட்டு கார் வைத்திருந்தவர் சாவித்திரி மேலும் சென்னையில் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி நீச்சல் குளத்துடன் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி புதிய பங்களாவில் குடியேறி வாழ்ந்தார்கள்.

இடது கை பழக்கமுடைய சாவித்திரிக்கு கார் ஓட்டுவதில் அலாதி பிரியம் இருந்ததை என சொல்லலாம். பிராப்தம் என்ற படம் தயாரிக்க திட்டமிட்டாக சமயத்தில் தான் ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டது.


மூக்க மனசுலு என்ற தெலுங்கு திரைப்படத்தை தமிழில் எடுக்க நினைத்த சாவித்திரி தன் கணவர் ஜெமினியிடம் அதைச் சொல்ல அந்த படத்தில் தன்னை வாடா, போடா என்று அழைக்க கூடிய வகையில் படம் உள்ளது எனக் கூறினார்.

மேலும் தமிழில் இந்த படம் வெற்றி அடையாது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற கருத்தை ஓபன் ஆக ஜெமினி தெரிவித்தார். இந்தப் படத்தை தானே நடித்து தானே இயக்கப் போவதாகவும் தயாரிக்கப் போவதாகவும் சாவித்திரி கூறிய சமயத்தில் சற்று உடல் எடை அதிகரித்து இருந்தார்.

சிவாஜி மற்றும் சாவித்திரி ஜோடி போட்டு நடித்த படங்களில் மிகவும் தோல்வியை சந்தித்த படங்களில் ஒன்று.தான் இந்த பிராப்தம் இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை அதனை அடுத்து படத்தை சாவித்திரி தயாரித்த விஷயமும் சிவாஜிக்கு தெரியாது.

ஜெமினி மற்றும் சாவித்திரிக்கு மது அருந்து படக்கூடிய பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் மது அருந்தும் போது போதை தலைக்கேறி சாவித்திரி ஜெமினி கணேசனை வீட்டை விட்டு வெளியேறுமாறு சொன்னார்.


இதையும் படிங்க: 42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

இதற்கு காரணம் ஜெமினி கணேசன் தன் நடிக்கும் நடிகைகளோடு தொடர்பில் இருந்ததை பலமுறை கண்டித்தும் ஜெமினி கேட்கவில்லை. காதலித்த சாவித்திரி தன்னை வெளியேற சொன்னதை அடுத்து மனம் உடைந்த ஜெமினி என்னை வெளியேற சொன்ன உன்னிடம் இருக்கும் அனைத்தும் உன்னை விட்டு செல்லும் என்று சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து சாவித்திரி தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தொலைத்த நிலையில் அவரது மகன் மற்றும் மகள் பெயரில் இருந்த சொத்துக்களை ஜெமினி கணேசன் மீட்டுக் கொடுத்தார். எனினும் மகளின் கல்யாணத்திற்கு ஜெமினியை அழைக்கவில்லை.

அளவுக்கு அதிகமாக குடித்து தன்னுடைய அனைத்தையும் தொலைத்ததோடு மட்டுமல்லாமல் எமனை பக்கத்தில் வர வைத்துக் கொண்ட சாவித்திரியின் கடைசி காலம் மிகவும் சிரமமாக இருந்த போதும் ஜெமினிகணேசன் அவருக்கு உரியவற்றை செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.