உன் கூட படுக்கணும்.. என அழைத்த இயக்குனர் இவர் தான்..! – பெயருடன் கூறிய நடிகை ஷகிலா..!

நடிகை ஷகிலா முதன்முறையாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குனரின் பெயரை வெட்ட வெளியில் போட்டு உடைத்து இருக்கிறார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசி இருந்தார். அவர் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர் கூறிய கதையை கொண்டு யார் அந்த நடிகர்..? யார் அந்த இயக்குனர்..? என்ன படம்..? என்று விளாவரியாக இணைய பக்கங்களில் பதிவிட தொடங்கினார்கள் ரசிகர்கள்.

இது குறித்து பேசிய ஷகிலா, விசித்திராவுக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் எனக்கு தெரியும். அவருடன் சக நடிகையாக நான் பயணித்திருக்கிறேன். அவர் இன்னுமே தைரியமாக அந்த நடிகர்களின் பெயர்களை கூறியிருக்கலாம் என கூறியிருந்தார்.

சமீபத்தில் ஷகிலாவும் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஷகிலா. இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார்.

இலையில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும் அந்த பாலியல் தொல்லை கொடுத்தது யார்..? என்றும் ஷகிலா கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் தற்போது தெலுங்கு திரையுலகில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் பல்வேறு போராட்டங்களை சந்தித்தேன். ஒரு கட்டத்தில் நடிகர் அல்லரி நரேஷ்-ன் தந்தையும் இயக்குனருமான ஈவிவி சத்திய நாராயணா என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்.

என்னுடைய அடுத்த படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன். என்னுடைய அறைக்கு வா என்று சொன்னார். தற்பொழுது, நான் உங்கள் படத்தில் நடித்து விட்டேன். எனக்கு சம்பளமும் வந்துவிட்டது. உங்களுடைய அடுத்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டு நான் வந்து விட்டேன்.

அவர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால் தெலுங்கு மீடியாக்களில் இது பற்றி பேச நான் தயாராக இருக்கிறேன். அவர் என்னை தன்னுடைய அறைக்கு அழைத்தார் என்பது உண்மை என பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் அல்லரி நரேஷ் தமிழில் குறும்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவருடைய தந்தை  ஈவிவி சத்திய நாராயணா மீது நடிகை ஷகிலா பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …