Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கூட பொறந்த தம்பியே ஒரு முறை என்னை..” எந்த பொண்ணுக்கும் இது நடக்ககூடாது.. ஓப்பனாக கூறிய ஷகீலா..!

Tamil Cinema News

“கூட பொறந்த தம்பியே ஒரு முறை என்னை..” எந்த பொண்ணுக்கும் இது நடக்ககூடாது.. ஓப்பனாக கூறிய ஷகீலா..!

மலையாள திரை உலகில் அசைக்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை ஷகீலா பற்றி அதிக அளவு கூற வேண்டாம். இவர் படம் வெளி வருகிறது என்றால் தியேட்டர்களை நோக்கி ஆண்கள் படையெடுத்து விடுவார்கள்.

இதையும் படிங்க: Breaking : நாட்டை உலுக்கிய புதுச்சேரி சிறுமி விவகாரம்.. கைதான இருவரின் வயசு என்னன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..

மேலும் இவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே மலையாளம் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றோர் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள். அந்த அளவு இவரது படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும்.

நடிகை ஷகீலா..

நடிகை ஷகீலா தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருந்தாலும், அதிக அளவு பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய மலையாள படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர்.

--Advertisement--

இதனை அடுத்து மலையாள திரை உலகம் இவருக்கு தடை விதித்ததை அடுத்து சென்னையில் வந்து செட்டிலான இவர் அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவரது மறுபக்கத்தை தெரிந்து கொண்ட தமிழக ரசிகர்கள் அனைவரும் இவரை ஷகீலா என்று அன்போடு அழைப்பதோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்தில் நடிக்க இவர் தகுதியானவர் என்ற பேச்சை பேசி இருக்கிறார்கள்.

எந்த பெண்ணிற்கும் நடக்கக்கூடாது..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் தன்னால் மறக்க முடியாத சம்பவம் பற்றி ஷகீலா பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் இவரை அன்போடு அம்மா என்று அழைத்து வருகிறார்கள்.

மேலும் இவர் திருநங்கையான ஷீட்டல் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது இவரது மனிதநேயத்தை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது என கூறலாம். வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்த இவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சார்ட் மீது சிறு வயதில் காதல் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தனியார் youtube பேட்டியில் அவர் கூறிய விஷயம் வாழ்க்கையில் இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தது. அது மலையாளத்தில் நான் கவர்ச்சி படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய தம்பி அவளது நண்பனோடு பாண்டிச்சேரிக்கு சென்று இருந்தார்.

அங்கு அவன் ஆபாச பட சிடி ஒன்றை வாங்கியதாகவும் அந்த படத்தை பார்த்த போது அதில் நான் நடித்து இருந்தது தெரிந்தது. இதனைப் பார்த்து அழுது கொண்டே பைக்கிலேயே அவன் வந்து விட்டான். மூன்று நாட்களாக அவனுக்கு காய்ச்சல் இருந்தது. என்ன ஆனது என்று தம்பியிடம் கேட்டேன்.

அதற்கு அவன் நீ அந்த மாதிரி படத்தில் நடித்திருக்கிறாய் என்று சொன்னார். நானும் அதற்கு ஆமாம் இந்த மாதிரியான படம் தான் செய்கிறேன் என்று அழுத்தமாக சொன்னேன். அத்தோடு நான் ஆபாச படத்தில் நடிக்கவில்லை கிளமராக நடிக்கிறேன் என்று சொல்லி புரிய வைத்தேன்.

ஓப்பன் டாக்..

அந்த வயதில் என் உணர்வை அவன் புரிந்து கொண்டான். அதனால் தான் ஆபாச உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுபவர்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.

இதையும் படிங்க: என்னது விஜய் என் நண்பரா..? ஹலோ.. அப்டி சொல்றது…” டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரே போடு..

நாளை திருமணம் நடந்து குழந்தைகள் வந்து விட்டால் இந்த வீடியோவை பார்த்து உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள் என்பதை யோசித்து செய்யுங்கள். நான் என் தம்பியிடம் அதை சரி செய்வதற்குள் படாத பாடுபட்டேன் என்ற விஷயத்தை ஓபன் ஆக தெரிவித்துவிட்டார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top