கணவர் அப்படி… மாமியார் இப்படி.. திருமணதிற்கு பிறகு நடிக்க வந்த Pandian Stores 2 Raji..

கணவர் அப்படி… மாமியார் இப்படி.. திருமணதிற்கு பிறகு நடிக்க வந்த Pandian Stores 2 Raji..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகத்தில் நடித்து வருபவர் ராஜி. இவரது உண்மையான பெயர் ஷாலினி. இவர் ஒரு தமிழ் பொண்ணு. தமிழில் மிக சரளாக, தைரியமாக பேசக்கூடியவர். ஆனால் இவருக்கு சீரியலில் டப்பிங் குரலில்தான் பேசியிருக்கின்றனர்.

சொந்த ஊர்

இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது இப்படி எல்லாமே கொங்கு தமிழ் பேசும் கோயம்புத்தூரில்தான்.
சின்ன வயசுல இருந்தே ஆடுவது, பாடுவது போன்றவற்றில் அதிக ஆர்வமாக இருந்தவர்தான் ஷாலினி. ஆனால் வீட்டில் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது.

தொடர்ந்து ஐடியில், சாப்ட்வேர் டெவலப்பராக இருந்த போதுதான், இது நம்ம லைப் கிடையாதே, நம்ம கேரியரை பேஷனை நாமே தேர்வு செய்வோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

பிரபுவுடன் திருமணம்

இந்த சூழ்நிலையில் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார் ஷாலினி. பலரும் நடித்த பிறகுதான் திருமணம் செய்வது வழக்கம். திருமணத்துக்கு பிறகுதான் நடிக்கவே வந்திருக்கிறார்.

தன் மனைவிக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதை தெரிந்துக்கொண்ட கணவர் பிரபு, ஷாலினியே அவரே ஆடிஷன் நடக்கிற இடங்களுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்.

கதாநாயகி ஆடிஷன்

அந்த மாதிரி நடந்த ஆடிஷனில் கிடைத்த வாய்ப்புதான் கதாநாயகி. கோயம்புத்தூரில் நடந்த அந்த ஆடிஷனில் பல ஆயிரம் பேர் கலந்துருக்காங்க.

இதையும் படியுங்கள்: கணவரின் துரோகம்.. மகளால் மன உளைச்சல்.. விஜயகுமாரின் முதல் மனைவி கோடீஸ்வரியான முத்துக்கண்ணு யாரு தெரியுமா..?

அதில் முதலில் 80 பேரை செலக்ட் பண்ணி, அப்புறம் அதுல 50 பேரை செலக்ட் பண்ணி, அதுல இருந்து 30 பேரை தேர்வு செய்து, அதுல 20 பேரை செலக்ட் பண்ணி கடைசியா அதுல 8 பேரை தான் செலக்ட் பண்ணியிருக்காங்க.

2வது இடத்தில் வெற்றி

அந்த எட்டு பேர்ல அடுத்தடுத்த லெவல்ல பெர்பாமென்ஸ் பண்ணி, அந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வந்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நடிகை ராதிகா இருவரது மனதில் இடம்பிடித்து கதாநாயகி நிகழ்ச்சியில் 2வது இடத்தில் வெற்றி பெற்றவர்தான் ஷாலினி.

அந்த நிகழ்ச்சியில் பருத்தி வீரன் பிரியாமணி, சின்னதம்பி குஷ்பு ஆகியோரை போல நடித்து, அங்கிருந்தவர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார் ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது. ஷாலினி நடிப்பை, நடிகை பிரியாமணியே பாராட்டி இருக்கிறார்.

வருங்கால மாமியார்

பிரபு நடத்திய 21 ஸ்டுடியோவில் ஷாலினி நடன பயிற்சி வகுப்பில் சேர்ந்துதான் அவரை காதலித்து இருக்கிறார். அந்த காதலை நேரடியாக தனது வருங்கால மாமியார், அதாவது பிரபுவின் அம்மாவிடம் கூறி, உங்க பையன் ரொம்பவும் ஷை டைப் ஆக இருக்கிறார் என்றும் பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகருடன் ஸ்ரீரெட்டி.. கசியவிட்ட சக நடிகை.. பரபரப்பில் கோடம்பாக்கம்…

அதே போல் மாமியார்தான், ஷாலினிக்கு பல விஷயங்களில் அதிக ஆதரவு தந்து, அவரது கனவுகள் நிறைவேற உதவுகிறார். தன் மருமகள் கனவுகளை எல்லாம் நனவாக்குவதில் ஆர்வமாக இருக்கிறார்.

கணவரும், மாமியாரும் இப்படி வாய்த்ததால் திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ராஜி என்கிற ஷாலினி மிக சந்தோஷமாக இருக்கிறார்.