கணவரின் துரோகம்.. மகளால் மன உளைச்சல்.. விஜயகுமாரின் முதல் மனைவி கோடீஸ்வரியான முத்துக்கண்ணு யாரு தெரியுமா..?

கணவரின் துரோகம்.. மகளால் மன உளைச்சல்.. விஜயகுமாரின் முதல் மனைவி கோடீஸ்வரியான முத்துக்கண்ணு யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவர்தான் விஜயகுமார். ரஜினி, கமல் போன்றவர்களுடன் சினிமாவில் அறிமுகமான சம காலத்துக்கு கலைஞன். விஜயகுமார் அறிமுகமான முதல் படம் ஸ்ரீ வள்ளி. அதன்பிறகு பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

விஜயகுமார்

முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர், பின் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு வில்லனாக மாறிய விஜயகுமார், 1990களுக்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார்.

குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, பாரதி கண்ணம்மா போன்ற படங்களில் விஜயகுமாரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, நடிகை மஞ்சுளா என 2 மனைவிகள். இதில் முத்துக்கண்ணுவுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள், அருண்விஜய் என்ற மகன் இருக்கிறார்.

முத்துக்கண்ணு

சினிமாவில் நடிக்க வரும் முன்பே, விஜயகுமார் உறவினர் மகளான முத்துக்கண்ணுவை திருமணம் செய்துக்கொண்டார். முத்துக்கண்ணு சமையலில் வல்லுனர். மிக அருமையாக, சுவையாக அசைவம் மற்றும் சைவம் உணவு வகைகளை சமைப்பவர்.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகருடன் ஸ்ரீரெட்டி.. கசியவிட்ட சக நடிகை.. பரபரப்பில் கோடம்பாக்கம்…

நடிகை மஞ்சுளா

சினிமாவில் நடிக்க வந்த பிறகு, நடிகை மஞ்சுளாவை காதலித்து விஜயகுமார் திருமணம் செய்துக்கொண்டார். தன் கணவரின் விருப்பம் அறிந்து, இந்த விஷயத்தில் அவருக்காக விட்டுக்கொடுத்தார் முத்துக்கண்ணு.

மஞ்சுளாவுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள். இவர்களில் ப்ரீத்தா இயக்குநர் ஹரியின் மனைவி. வனிதா, ஸ்ரீதேவி சில படங்களில் நடித்துள்ளனர்.

மனம் உடைந்தார்

முத்துக்கண்ணுவின் மகள் அனிதா திருமணம் செய்ய நிச்சயித்த நிலையில் சிங்கப்பூர் மாப்பிள்ளை திடீரென இறந்து போனதால், முத்துக்கண்ணு மனம் உடைந்தார். எனினும் அனிதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்யப்பட்டது. சமீபத்தில் அனிதா மகள் தியாவுக்குதான் திருமணம் நடந்தது.

மஞ்சுளாவுடன்

முதலில் முத்துக்கண்ணுவுடன் குடும்பம் நடத்திய விஜயகுமார், மஞ்சுளாவை திருமணம் செய்த பிறகு, மஞ்சுளாவுடன் தங்கி விட்டார். மஞ்சுளா மறைவுக்கு பிறகே, மீண்டும் முதல் மனைவி முத்துக்கண்ணுவுடன் இணைந்தார்.

இதையும் படியுங்கள்: இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

வனிதா குற்றச்சாட்டு

ஆனால் தன் அம்மா மஞ்சுளா சம்பாதித்த சொத்துகளை எல்லாம் அப்பா விஜயகுமார், மகள்கள் பெயரில் எழுதி வைக்காமல் தன் முதல் மனைவி ( பெரியம்மா) முத்துக்கண்ணு பெயரிலும், மகன் அருண்விஜய் ( அண்ணன்) பெயரிலும் எழுதி வைத்துவிட்டதாக, வனிதா ஏற்கனவே குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தோஷமாக

நடிகை மஞ்சுளாவை 2வது திருமணம் செய்த கணவரின் துரோகம், திருமணம் நின்றுபோன மகளால் ஏற்பட்ட மன உளைச்சல் இதை எல்லாம் கடந்து, விஜயகுமாரின் முதல் மனைவி கோடீஸ்வரியான முத்துக்கண்ணு இப்போதும் கணவர், மகள்கள், பேரன், பேத்திகளுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.