Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெந்நீரில்

“நீங்கள் வெந்நீரில் குளிப்பதால் உடலில் ஏற்படும் ஆபத்து..!” – பற்றி பார்க்கலாமா?

அதிகாலை எழுந்ததுமே குளிப்பது என்பது மிகவும் சிறப்பான விஷயம் அதில் காலை நேரத்தில் குளிர் அதிகமாக உள்ளது என்று சாதாரண தண்ணீரில் குடிப்பதை தவிர்த்து வெந்நீரில் குளிப்பவர்கள் அதிகம்.இதில் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். கொதிக்க, கொதிக்க நீரை போட்டு சுடச்சுட அப்படியே ஊத்தி குளிப்பார்கள்.

Hot water bath

இப்படி அதிகாலையில் குளிப்பதன் மூலம் உடல் சுத்தமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு புத்துணர்வும் புத்துணர்ச்சியும் ஏற்படும். அந்தக் குளியலில் வெந்நீரை பயன்படுத்துவதன் மூலம் உடலில் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

அரை மணி நேரத்திற்கு மேலாக நீங்கள் சுடு நீரில் குளிப்பதின் மூலம் உங்களது இனப்பெருக்கத்திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. கருவுறுதல் பிரச்சனை உருவாக இதுவும் காரணம் என்று கூறியிருக்கிறார்கள். எனவே குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் எந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் விளக்கு பெற முடியும்.

Hot water bath

அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் வெந்நீரில் குடிக்கக்கூடாது. அப்படி நீங்கள் வெந்நீரில் குளிப்பதன் மூலம் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதம்  வெளியேறி சருமம் வறண்டு விடும். இதனால் தோளில் அரிப்பு மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம்.

 

--Advertisement--

வெந்நீரில் குளிப்பதின் மூலம் உங்களுக்கு சில நிமிடங்களே ரிலாக்ஸ் ஆன உணர்வு கிடைக்கும். குளித்து முடித்த உடனே தூங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு சோம்பேறித்தனத்தை உங்களுள் வளர்த்து விடும்.

வெந்நீரில் குளிக்கும் போது கண்களின் ஈரப்பதத்தை இது பாதித்து கண்களில் வறட்சியையும், அரிப்பையும் ஏற்படுத்துவதோடு, கண்களை சிவப்பு நிறத்தில் மாற்றிவிடும். எனவே குளிர்ந்த நீரில் குளிக்க முயற்சி செய்யுங்கள்.

Hot water bath

இளம் வயது நபர்களுக்கும் வெந்நீரில் குளிப்பதின் மூலம் சருமச் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை விரைவில் தரும் என்பதால் வெந்நீரில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

சூடான நீரை தண்ணீர் தலையில் ஊற்றும் போது தலைமுடியின் வேர்க்கால்கள் சேதம் அடைந்து முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும்.

எனவே மேற்கூறிய கருத்துக்களை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு இனிமேலாவது வெந்நீர் குளியலுக்கு அடிமையாகி இருந்தால் அதை விடுத்து விட்டு குளிர்ந்த நீரில் குளிக்க முயற்சி செய்யுங்

Continue Reading
 

More in

Trending Now

To Top