“ரியல் சிங்கப்பெண் துர்க்கை அம்மன்..!” – வழிபாடு முறைகள்..!

சிங்க பெண்ணே.. சிங்க பெண்ணே.. என்ற பாடல் வரிகள் உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ ஆர் ரகுமானால் இசையமைக்கப்பட்ட எந்த பாடல் வரிகளில் உண்மையான ரியல் சிங்கப் பெண்ணான  காலம் காலமாக வழிபட்டு வரும் துர்க்கை அம்மனின் வழிபாட்டு முறைகள் பற்றி பார்க்கலாம்.

துர்க்கை அம்மனின் வழிபாட்டு முறைகள்

துர்+கை அதாவது இந்த சொல்லில் அர்த்தமானது தீய சக்திகளை தன் கையால் அளிப்பவள் என்பதால் இவளுக்கு துர்க்கை என்ற பெயர் வந்தது. மேலும் துர்கா தேவியை ஆர்த்தி தேவி. ஜோதி தேவி என்ற பெயர்களாலும் அழைப்பார்கள்.

துக்கத்தை அழிக்கக்கூடிய தேவியை வழிபடும் போது நமது குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

துர்க்கை அம்மனுக்கு பிரார்த்தனை செய்யக்கூடியவர்கள் கண்டிப்பாக வியாழன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை  துர்க்கையை வழிபடுவது மிகவும் சிறப்பான விஷயமாகும்.

அதுமட்டுமல்லாமல் துர்க்கை அம்மனை வழிபட உகந்த காலமாக ராகு காலம் உள்ளது. இந்த ராகு காலத்தில் துர்கா தேவிக்கு நீங்கள் ராகு தோஷம் நீங்க எலுமிச்சம் பழம் தீபத்தை மாலை நேரத்தில் போடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

--Advertisement--

அதுமட்டுமல்லாமல் அமாவாசை பௌர்ணமி திதிகள் ஞாயிற்றுக்கிழமை போன்றவற்றில் துர்க்கையை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

தீராத பிணியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் போட தீராத நோய்களும் தீரும்.

இந்த பூஜையில் நீங்கள் அம்மனுக்கு மல்லிகைப்பூ, மஞ்சள் சாமந்திப்பூ, சாத்தி வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். விளக்கு ஏற்றிய பிறகு மூன்று சுற்றுகள் துர்க்கையை வலம் வந்து நமஸ்தரிக்க வேண்டும். குறைந்தபட்சம் 20  நிமிடங்கள் ஆவது கோவிலில் அமர்ந்து துர்க்கை பாடல்களை பாடி அம்பாளை துதிக்க வேண்டும்.

இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி பிறகு நெய் தீபம் ஏற்றி ஐந்து ஊதுபத்தி கொளுத்தி, கற்பூர ஆராதனை செய்து தேவியை மகிழ்விக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நீங்கள் செய்யும் போது துர்க்கை மனம் இறங்கி நல்ல பலன்களை கொடுப்பாள்.