Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பட்டுப்புடவையை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்..! – 100% ஃபாலோ பண்ணுங்க..!!

ஆசை ஆசையாக பார்த்து பார்த்து வாங்கிய பட்டுப்புடவையை நாம் அப்படியே சில தினங்கள் மட்டுமல்ல, சில மாதங்களாகவே பெட்டிக்குள் அப்படியே வைத்து விடுவோம். விசேஷ தினங்களுக்கு மட்டுமே அந்தப் பட்டுப் புடவைகள்  நாம் உடுத்திவிட்டு துவைக்காமல் அப்படியே மடித்து வைத்து விடுவோம்.

 அப்படிப்பட்ட நம் மனதிற்கு பிடித்த பட்டுப் புடவைகளை நீண்ட நாட்களாக எப்படி பாதுகாக்க வேண்டும். என்பதை எந்த கட்டுரையில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பட்டு புடவையை பராமரிக்க டிப்ஸ்

👍 நீங்கள் பட்டுப் புடவையை கட்டிக்கொண்டு விசேஷங்களுக்கு சென்று வந்த பின்பு அந்த புடவையை அப்படியே மடித்து வைக்காமல் ஒரு காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

👍 அதுபோல ஹங்கர்களில் இந்தப் பட்டுப் புடவையை தொங்கவிடவும் கூடாது. ஆறு மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பட்டுப் புடவைகளை மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் வெயிலில் கொஞ்சம் நேரம் வைத்து மடித்து வைக்க வேண்டும்.

👍 அதேபோல பட்டுப்புடவைகளை நீங்கள் அயன் செய்து அழகாக மடித்து வைத்திருந்தால் அந்த மடிப்பு பகுதிகளிலேயே அதை கிழிந்து விட வாய்ப்பு உள்ளதால் சுருட்டி வைப்பது தான் நல்லது.

--Advertisement--

👍ஜரிகைகள் அதிகமாக இருக்கும் புடவை என்றால் அந்த ஜரிகை உட்புறம் இருக்குமாறு நீங்கள் மடித்து வைக்க வேண்டும். இல்லையெனில் ஜரிகை  நிறம் மங்கி விடும்.

👍 பட்டுப் புடவையை ஒவ்வொரு முறையும் நீங்கள் ட்ரை கிளீன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் ட்ரை கிளீன் செய்தால் போதுமானது. எப்படி ட்ரை கிளீன் செய்யக்கூடிய வசதி உங்கள் பகுதிகளில் இல்லை என்றால் தலைக்கு போடும் ஷாம்பூ அல்லது பாடி வாஷை பயன்படுத்தி உங்கள் பட்டுப் புடவைகளை துவைத்து இளம் வெயிலில் உலர்த்துவது மிகவும் நல்லது.

👍பட்டுப் புடவைகளில் பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காக நாப்தலின் பால்ஸ்சை நீங்கள் பட்டுப் புடவை வைக்கும் கப்போடில் போட்டு வைக்கலாம்.

👍 அதுமட்டுமல்லாமல் வேப்ப இலைகளையும் போட்டு வைப்பது மிகவும் நல்லது.பட்டுப்புடவையில் எண்ணெய் அல்லது டீக்கரை பட்டுவிட்டால் அதை நீக்க நீங்கள் சால்கம் பவுடரோடு உலர்ந்த கோதுமை கடலை மாவு ஆகியவற்றை தேய்த்து பிறகு மென்மையான டிடர்ஜென்ட் கொண்டு லைட்டாக துவைப்பதின் மூலம் கரைகளை அகற்றி விட முடியும்.

👍 அதிகமாக ஜரிகை இருக்கக்கூடிய புடவைகளுக்கு நீங்கள் பால்ஸ் வைத்து தேய்த்துக் கொள்ளலாம் .மேற்குரிய டிப்ஸ்களை நீங்கள் ஃபாலோ செய்யும் போது உங்கள் பட்டுப் புடவை புதிய புடவையை போலவே காட்சியளிக்கும்.

Continue Reading
Ads

More in

Trending Now

To Top