கல்யாணத்துக்கு பிறகும் அந்த பழக்கத்தை விட முடியல.. சிம்ரன் ஓப்பன் டாக்..!

ரிஷி பாமா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை சிம்ரன் மும்பையில் இருக்கும் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். இதனை அடுத்து இவர் தூதர் தர்ஷனில் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முக்காபுலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இதனை எடுத்து 1995-ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து 1996-ஆம் ஆண்டு இறுதியில் வெளி வந்த தேரே மேரே சப்னே என்ற படம் இவருக்கு வெற்றிப்படமாக மாறியது.

நடிகை சிம்ரன்..

தமிழ் திரையுலகில் அதிகளவு சம்பளம் வாங்கக் கூடிய நடிகையாக 2000-வது ஆண்டு திகழ்ந்த நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

---- Advertisement ----

நடிகை சிம்ரனுக்கு அதிகளவு ரசிகர்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் இடுப்பை அசைத்து ஆடுகின்ற  நடனத்தை காண்பதற்கு என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள்.

தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் சிம்ரன் மிகப்பெரிய ஸ்டாராக ஒரு காலகட்டத்தில் ஜொலித்தவர்.

இடுப்பழகி சிம்ரன் ஆக பல நடனங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை சிம்ரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது தன்னுடைய வாழ்க்கை குறித்த மிக முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பேசி இருக்கிறார்.

குறிப்பாக அவர் கூறியதாவது சினிமா தான் என்னை இந்த உலகத்திற்கு காட்டியது. சினிமா தான் என்னை வளர்த்து ஆளாக்கியது என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே சினிமா தான் திருமணத்திற்கு முன்பு சினிமா என இருந்தேன்

கல்யாணத்துக்கு பிறகு அந்த பழக்கத்தை விடல..

அது மட்டும் அல்ல காலையில் சென்னையில் படப்பிடிப்பில் இருப்பேன். இரவு டெல்லியில் படப்பிடிப்பில் இருப்பேன். இதற்கு அடுத்த நாள் அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருப்பேன் இப்படி நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கே தெரியாத அளவுக்கு பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தேன்.

ஏனென்றால் சினிமா எனக்கு எல்லாமே கொடுத்தது. நான் சினிமாவுக்கு எல்லாவற்றையும் கொடுக்க வேண்டியது அவசியம். அதனால் ஒப்பந்தமான படங்களில் சரியான நேரத்திற்கு சென்று நடித்துக் கொடுப்பேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்கு சினிமாவை தாண்டி நிறைய பொறுப்புகள் வர ஆரம்பித்தது.

என்னுடைய குழந்தைகளை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அவருடைய பள்ளி வேலைகளை நான் பார்க்க வேண்டும். அவர்களுக்கு சரியான உணவு அவர்களுடைய வளர்ச்சியை இவற்றில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அவங்களுடைய படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

பிறகு என்னுடைய கணவர் அவருடைய தொழில் என வீட்டில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. சில காலம் நான் டெல்லியில் வசித்தேன். சிலகாலம் மும்பையில் வசித்தேன். அதன் பிறகு அமெரிக்காவிலும் சில ஆண்டுகள் வசித்தேன்.

இப்படியாக என்னுடைய திருமண வாழ்க்கை நகர்ந்தது. ஆனால் திருமணத்திற்கு  பிறகும் நான் ஒரு பழக்கத்தை மட்டும் விடவே இல்லை. அது தான் சினிமா துறையின் தொடர்ந்து தொடர்பில் இருப்பது. 

என்னால் எந்த அளவுக்கு என்னை வளர்த்து விட்ட சினிமாவுக்கு பங்களிப்பு கொடுக்க முடியுமோ அதன் அனைத்துமே பங்களிப்பு கொடுத்துக் கொண்டே தான் இருந்தேன்.

நான் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் திரைத்துறையில் இருப்பவர்களுடன் தொடர்ந்து என்னுடைய நட்பு இருந்தது. அந்த பழக்கத்தை என்னால் விடவே முடியவில்லை. 

தற்போதும் பல்வேறு நடிகர் நடிகைகளுடன் என்னுடைய தோழிகளுடன் தொடர்பில் தான் இருக்கிறேன். இது தான் சினிமாவில் தன்னை இன்னுமே உயிர்ப்புடன் வைத்துக் கொண்டு இருக்க உதவுகிறது என நினைக்கிறேன் என்று பேசி இருக்கிறார் நடிகை சிம்ரன். 

---- Advertisement ----