எனக்கு 17 வயசு தான் ஆகுது.. இந்த கேள்வியை கேக்குறீங்க.. கடுப்பான நடிகை அனிகா சுரேந்திரன்..!

எனக்கு 17 வயசு தான் ஆகுது.. இந்த கேள்வியை கேக்குறீங்க.. கடுப்பான நடிகை அனிகா சுரேந்திரன்..!

குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் சில நடிகைகள், அடுத்த பத்து ஆண்டுகளில் நாயகியாக மாறிவிடுகின்றனர். அப்படி பேபி நட்சத்திரமாக நடித்து நடிகையாக மாறிய பல நடிகைகள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகைகள் மீனா, ஷாலினி, ஆர்த்தி, குஷ்பு, ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி விஜயகுமார், சுஜிதா, குட்டி பத்மினி என பல நடிகைகளை சொல்லலாம். இவர்கள் எல்லாமே குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பின்னாளில் பெரிய நடிகைகளாக மாறியவர்கள்.

அனிகா சுரேந்திரன்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமார் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். அவரே சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்திலும், அஜித்குமார் மகளாக நடித்திருந்தார். அதனால் அஜித்குமாரின் ரீல் மகள் என்றே இவளை அடையாளப்படுத்தி கூறுகின்றனர்.

சோட்டா மும்பை

கேரளாவைச் சேர்ந்த அனிகா சுரேந்திரன், 2007ம் ஆண்டில் சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

தொடர்ந்து அஜித் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன், கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியான புட்டபொம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜயகாந்த் குறித்து உண்மையை உடைத்த சுகன்யா..!

கட்டுக்கடங்காத கவர்ச்சியில்…

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியானது. இதில் கட்டுக்கடங்காத அளவில் கவர்ச்சி காட்டி நடித்திருந்த அனிகா சுரேந்திரனை பார்த்து, மலையாள ரசிகர்களே வாய் பிளந்து விட்டனர். அந்த அளவுக்கு கவர்ச்சியில் எல்லை மீறி இருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

தொடர்ந்து மலையாளத்தில் மாலு என்ற படத்தில் நடித்துள்ள அனிகா சுரேந்திரன் இப்போது, தனுஷ் டைரக்ட் செய்துள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. எத்த தண்டி.. நீச்சல் உடையில் குளுகுளு போஸ் கொடுத்துள்ள எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

இந்த படம் மட்டுமின்றி தனக்கான முக்கியத்துவம் அதிகமுள்ள படங்களை, கேரக்டர்களை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருந்து வருகிறார் அனிகா.

பீர் சாப்பிடுவீங்களா?

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அவரது நேர்காணல் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் கேள்வி கேட்ட தொகுப்பாளர் நீங்கள் பீர் சாப்பிடுவீர்களா, ஒயின் அருந்துவீர்களா என்ற ஒரு கேள்வியை கேட்கிறார்.

அதற்கு சற்று கோபமாக பதிலளித்த அனிகா, எனக்கு இப்போது 17 வயதுதான் ஆகிறது. எதற்கு இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கறீங்க. இப்படி எல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீங்க என்று கூறியுள்ளார்.

   

--Advertisement--