Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என்னங்க இது..? இதை எதுக்குங்க பண்ட்றீங்க..? ரசிகர் செய்த செயல்.. அதிர்ந்து போன ஷிவாங்கி..!

விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஷிவாங்கி ஒரு மிகச்சிறந்த பாடகி. இவர் விஜய் டிவியில் 2020 ஆம் ஆண்டு நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் பசங்க படத்தில் வெளி வந்த “அன்பாலே அழகாகும்” என்ற பாடலை பாடி தனது குரல் வளத்தை நிரூபித்தார்.மேலும் சுட்டித்தனமான குரலாலும், குறும்பாலும் பலரையும் கவர்ந்து இழுக்க கூடிய வகையில் இவரது நகைச்சுவை திறமை இருக்கும்.

நடிகர் சாந்துனு நடிப்பில் வெளி வந்த முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் சாம் விஷாலோடு இணைந்து டாக் லெஸ் ஒர்க் மோர் என்ற பாடலை பாடி அசத்தினார். மேலும் வினித் சீனிவாசனோடு சேர்ந்து “அடிபொலி” பாடலை பாடி கலக்கினார்.

இதனை அடுத்து நடிகர் சிம்புவுடன் மாயன் படத்திற்காக மச்சி என்ற பாடலை பாடியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி இருக்கிறார். 

தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய இவர் பன்முக திறமையை கொண்ட நடிகை. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு பக்கத்திலும் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

--Advertisement--

இவர் தனக்கு என்று ஒரு Youtube சேனலை வைத்திருக்கிறார். அவ்வப்போது அதில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி விடுவார். மேலும் இவர் அந்த யூடியூபில் எப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இவருக்காக காத்திருக்கும்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் இவருக்கு பரிசு வழங்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விட்டார். இதில் ரசிகர் ஷிவாங்கியிடம் அவரது போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.

அதன் பின் டாட்டூ இருக்கிறது. காட்டவா? என்று ரசிகர் கேட்க அப்படியெல்லாம் பண்ணாதீங்க. ஏன் இப்படி பண்ணறீங்க என்று செல்லமாக கேட்கிறார். இந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு வைரலாக பரவியும் வருகிறது.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top